March 25, 2023

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பதவி விலகிட்டார்!

குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் வழங்கினார்.

குஜராத் மாநிலத்தில் 1995ம் ஆண்டு முதல் சில வாரங்கள் தவிர்த்து பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் வரையில் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார் மோடி. மோடிக்கு பிறகு ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வரானார், அவரைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தவர் விஜய் ரூபானி. 2022ம் ஆண்டு குஜராத் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார் விஜய் ரூபானி.

கவர்னரைச் சந்தித்து விட்டு மீடியாக்களிடம் பேசிய விஜய் ரூபானி, “ குஜராத் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பாஜக தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வழிநடத்திய கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய செயல்பாட்டுக்கு புதிய தலைமை தேவைப்படும். மக்களுக்கு சேவை செய்ய பாஜக எப்போதும் வாய்ப்பு வழங்கி வருகிறது.: என்று அவர் கூறினார்.