Exclusive

கார்பன் – பட விமர்சனம்!

கோலிவுட்டில் ஒரு சாபக்கேடு உண்டு.. அம்மா பாசம் கொண்ட ஒரு கதை வந்து ஜெயித்து விட்டால் அதே டைப்பிலான பத்துக்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து வரும்., சிரிப்புப் படமொன்று வந்து ஹிட் அடித்தால் அடுத்தடுத்து காமெடி சினிமா ரிலீஸாகும். அப்படித்தான் பேய், ரவுடி மாதிரியான கதைகளில் டைம் லூப் – அதாவது கனவையும் நனவையும் கலந்து அடிக்கும் கதை அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வந்த மாநாடு போல் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் புதுமையான கதையுடன் வெளியாகி உள்ளது கார்பன் படம். உண்மையில் அதைவிட புதுமையான திரைக்கதை, பல நேரங்களில் நாம் கணிக்க முடியாத திருப்பங்கள் பல ப்ளஸ்கள் படத்தில் இருக்கிறது. ஆனால் படத்தை பிரமாண்டமாக உருவாக்க செலவிட்ட தொகை.. அங்குதான் பிரச்சனை சரி ஆனாலும் மினிமம் பட்ஜெட்டில்  இப்படி ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநரின் உழைப்புக்காகவே இப்படத்தைப்  பார்க்கலாம்.

கதை என்னவென்றால் நாயகன் விதார்த் ஐடிஐ முடித்துவிட்டு காவல்துறையில் சேரவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். கார்ப்ரேஷனில் பணிபுரியும் விதார்த்தின் தந்தை மாரிமுத்து, விதார்த் வேலைக்கு செல்லாமல் ஊர்ச் சுற்றி திரிந்து வருவதால் தண்டச் சோறு என்று கோபித்துக் கொண்டதால் வேலைக்கு போய் முதல் மாசம் சம்பளத்துடன் வந்துதான் பேசுவேன் என்று வீராப்புடன் இருக்கிறார் விதார்த். இதனிடையே , விதார்த்துக்கு கனவில் வருகிற விஷயங்கள் நிஜத்தில் நடந்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவரும் வேலைக்கு சென்று முதல் மாத சம்பளம் வாங்கும் சமயத்தில் கனவில் அவரின் தந்தைக்கு விபத்து ஏற்படுவது போல் தோன்றுகிறது. அதை தடுக்க முயற்சி செய்வதற்குள் அந்த விபத்து நடந்துவிடுகிறது. மேலும் நடந்தது விபத்தல்ல கொலை முயற்சி என்று புரிய, இது ஏன் நடத்தப்பட்டது என்று தினம் தினம் கனவில் தேடி செல்கிறார். உண்மையில் இது கொலையா? இந்த கொலையை நிகழ்த்த காரணம் என்ன? கொலையாளிகளை கதாநாயகன் விதார்த் பிடித்தாரா? என்பதே கார்பன்.

விதார்த் நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார் ஆனால் அவரது முந்தைய படங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் 25வது என்ற அடைமொழியுடன் தயாரான இப்படத்தை ஏதோ கடமைக்கு செய்தது போல் இருக்கிறது. தன்யா பாலகிருஷ்ணனுக்கு நடிக்க ஸ்கோப் உள்ள பாத்திரம். கிடைத்த வாய்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார். விதார்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து, தன் பாத்திரத்தை உணர்ந்து கவர்கிறார்.

விவேகானந்த் சந்தோசம் கேம்ராவும் சாம்.சி.எஸ்ஸின் மியூசிக்கும் பாஸ் மார்க் வாங்குகிறது.

ஆனால் படத்தின் கதை ஆரம்பிக்கும் விதமும் கனவு நடப்பதும் உண்மையில் சர்ப்ரைஸ் தான் ஆனால் அதன் பிறகு அந்த நாளை மீண்டும் உருவாக்க நாயகன் நினைப்பதெல்லாம் என்ன லாஜிக் என்பது தொடங்கி ஆங்காங்கே ரசிகனிடமிருந்து விலகிச் சென்று விடும் போக்கால் ஹிட் பட லிஸ்டில் சேராமல் போய் விடுகிறது.. !

மொத்தத்தில் கார்பன் – ஒரு முறைப் பார்க்கலாம்

மார்க் 3 / 5

aanthai

Recent Posts

முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸ்) கோர்பிவேக்ஸ் – மத்திய அரசு ஒப்புதல்

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸ்) கோர்பிவேக்சை செலுத்த மத்திய அரசு ஒப்புதல்…

29 mins ago

பால்டிக் கடலுக்கு அடியில் ரசாயன ஆயுதங்கள்!- பேரழிவுக்கு வழி!

பால்டிக் கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்களால், இயற்கைக்கு பேரழிவு ஏற்படும் என்றும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

46 mins ago

சபரிமலை பிரசாதம் : பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் = கேரள அரசு அறிவிப்பு!

கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட் :வெற்றி பெற்ற 2 இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி!- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னையில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா ஜூலை 28 நடைபெற்ற நிலையில், நிறைவு விழா…

2 hours ago

காட்டேரி – விமர்சனம்!

ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் வைபவ், சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காட்டேரி.…

8 hours ago

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ சோதனை!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக டிரம்ப் சொன்னது இதோ:…

24 hours ago

This website uses cookies.