குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி வாங்கிய தமிழ்நாடு போலீஸ்- என்ன ஸ்பெஷல் – வீடியோ & விளக்கம்!

மிழக காவல்துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று(ஜூலை 31) வழங்கினார். இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில காவல்துறைக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.தென் மாநிலங்களைப் பொருத்தவரை இதுவரை எந்த ஒரு மாநிலத்துக்கும் குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி வழங்கப்பட்டதில்லை. இந்நிலையில் தான் தமிழக காவல்துறையினருக்கு மிக உயரிய குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின் கொடி முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் பெற்றுக் கொண்டது. தமிழகத்தில் காவலர் முதல் டி.ஜி.பி. வரையிலான காவல்துறையினர் கொடியை இனி தங்கள் சீருடையில் அணியவுள்ளனர்.

இதை ஒட்டி நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடியரசுத் தலைவர் கொடியைப் பெற்றதால் தமிழக காவல்துறை உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறுகிறது. இந்தியாவிலேயே முதலில் பெண்களுக்கு காவல்துறையில் முன்னுரிமை அளித்தது தமிழ்நாடுதான். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள் இல்லை. காவல் நிலைய மரணங்களே இல்லை என சொல்லவில்லை; ஆனால் குறைந்துள்ளது. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல்துறை ஏற்படுத்த வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக் கூடாது. டி.ஜி.பி. முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில் இக்கொடி குறித்து விசாரித்த போது அமைதியை நிலைநாட்டுதல் மற்றும் போரில் ஈடுபடுதல் தொடர்பாக தேசத்திற்கு தனித்துவமான சேவையாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்திய ராணுவம், மாநிலங்களின் காவல்துறைக்கு அளிக்கப்படும் மிக உயரிய கௌரவம் தான் குடியரசு தலைவரின் வண்ணக்கொடி என்று தெரிய வந்துள்ளது. மேலும் வீரம், துணிவு, அர்ப்பணிப்பு, தொழிற்சார்ந்த திறன், நேர்மை மற்றும் மனிதகுல சேவை ஆகியவற்றை இந்த கொடி பிரதிபலிக்கிறது என்னனு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். படையின் கொடி, வண்ணக்கொடி சிறப்புக் கொடி என்று பல பெயர்களைக் கொண்டது.

இந்த கொடிதான் தமிழக காவல்துறைக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யாநாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இந்த கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவிடம் கொடுத்து வாழ்த்தினார். இந்த கொடியானது கம்பும், துணியும் கொண்டதாகும். அக்கம்பத்தின் மேற்பகுதி உட்பட அதன் நீளம் 87 ஆகும்.

கொடியின் அளவு இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடியின் பரிமாணங்களானது 39″ நீளம், 3 அகலம், 46″ நாண் மற்றும் 2″ சுருள். இக்கொடியை கொண்டு செல்ல அதற்கான கச்சை பயன்படுத்தப்படுகிறது. அதில் உறையும், அதற்கான பட்டையும் கொண்டதாக அமைக்கப்பட்டு, ஆடையின் மேல் வலது தோள்பட்டையில் குறுக்காக அணிவதைப் போன்று வடிவமைக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடியானது பஞ்சாப் மாநிலம் மலேர்கோட்லா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்கால அரசகுலத்தவரின் கலைநயம் மிகுந்த வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவில் கொடியை எடுத்துச் செல்லும் பாரம்பரியமானது பண்டைய கால இந்திய பழக்கவழக்கங்களுக்கு முந்தைய நீண்ட நெடிய மற்றும் சிறப்பு வாய்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளது என்கிறார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள்.

பண்டைய காலங்களில் ராணுவப் பிரிவுகள் அணிவகுத்துச் செல்லும்போது, அவர்கள் தங்களின் மன்னர், ராணியின் இறையாண்மையை பறைசாற்றுவதற்காக மன்னர், ராணியின் “தவஜா” (dhwaja) என்று அழைக்கக்கூடிய கொடியை ஏந்திச் செல்வர். வரலாற்றுக் கூற்றின்படி எதிரிகளிடம் தவஜாவை இழப்பது என்பது ராணுவத்திற்கு மிகப் பெரிய அவமானம் என்றும், அதே வேளையில், எதிரியின் தவஜாவை ராணுவம் கைப்பற்றிவிட்டால், அது மிகப் பெரிய கெளரவமாகவும் கருதப்படுவதாக வரலாற்று கூற்றுகள் சொல்கிறது.

இந்த பாரம்பரியம் நீண்ட காலமாக தொடர்ந்தது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் நடைமுறையில் இருந்தது. ராயல் இந்தியன் ராணுவப்படை, ராயல் இந்தியன் கப்பல் படை மற்றும் ராயல் இந்தியன் விமானப்படை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்ட அக்காலத்தைய மன்னரின் கொடிகள், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25ந் தேதி அன்று டேராடூனில் உள்ள இந்திய ராணுவ உயர் பயிற்சியகத்தில் வைக்கப்பட்டன. இவ்வாறு வைக்கப்பட்ட பிறகு, வகையிலான மன்னர், ராணியின் கொடிகளின் பயன்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இந்திய குடியரசுத் தலைவரின் கொடிகள் முப்படைகளின் மூத்த படை எனக் கருதப்படும் இந்திய கப்பல் படைக்குதான் முதன்முதலில் இந்திய குடியரசுத் தலைவரின் கொடி 27.05.951 அன்று வழங்கப்பட்டது. அன்று முதல் இந்த கொடியானது இந்திய நாட்டிற்கு சிறப்பான சேவையாற்றுவதற்காக பல்வேறு ராணுவ கப்பல், விமானப்படைப் பிரிவுகள், மாநில காவல்துறை, காவல் ஆணையரகங்கள், சிறப்பு ஆயுதப்படை காவல் பிரிவு. மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் உயர்பயிற்சியகங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்திய அரசால் அமைக்கப்பட்ட தேசிய அளவிலான குழு ஒன்று வகுத்துள்ள விரிவான நடைமுறைகளின் அடிப்படையில்தான் ஒரு மாநில காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் உயரிய கொடி வழங்கும் உத்தேச திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த கொடியை பெறுவது என்பது எந்த ஒரு மாநில காவல்துறைக்கும் மிகவும் பெருமைக்குரியதாகும். இந்திய நாட்டிலுள்ள காவல்துறையை பொருத்தவரை, இதுவரை பத்து மாநிலங்கள் குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி வழங்கப்பட்டுள்ளது.

1952- ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் காவல்துறைக்கும்,
1954ஆம் ஆண்டு டெல்லி காவல்துறைக்கும்,
1961-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா காவல்துறைக்கும்,
2003-ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர்,
2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறைக்கும்,
2012- ஆம் ஆண்டு திரிபுரா, 2019- ஆம் ஆண்டு குஜராத், 2021ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசம், 2022- ஆம் ஆண்டு அரியானா மற்றும் 2022-ஆம் ஆண்டு அசாம் மாநில காவல்துறைக்கு குடியரசு தலைவரின் வண்ணக்கொடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை 160 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பான வரலாறை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழக காவல்துறைதான் ஐந்தாவது பெரிய காவல்துறை. தமிழக காவல்துறையில் 132101 உள்ளனர். தமிழக காவல்துறையானது 2 வது முறையாக பாரம்பரிய கொடியை பெற்றுள்ளது மிகவும் சிறப்பானது. தமிழக காவல்துறையின் சேவை மற்றும் பல்வேறு விதமான சாதனைகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

aanthai

Recent Posts

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…!

பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு…

2 hours ago

உணவு விநியோகம் பெற உதவும் வாட்ஸ் ஆப் எண் 8750001323 – இந்திய ரயில்வே அறிமுகம்!

நம் நாட்டின் ரயில் பயணிகள் வாட்ஸ்-ஆப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.…

5 hours ago

சர்ச்சைகளுக்கிடையே விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்பு..!

பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை…

9 hours ago

இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில்…

15 hours ago

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…

1 day ago

சிம்ஹா நடித்த ‘வசந்த முல்லை’ படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…

1 day ago

This website uses cookies.