மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு முதல் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு 2023 முதல் 2027 வரை செய்துகொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.951 கோடிக்கு டிவி ஒளிபரப்பு உரிமம் ஏலம் போனது. வயாகாம் 18 நிறுவனம் உரிமத்தை கைப்பற்றியது. ஒரு ஐபிஎல் ஆட்டத்திற்கு ரூ.7.09 கோடி உரிமக் கட்டணம் என்ற விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.
மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் சீசன்கள் 2023 – 2027க்கான ஊடக உரிமைகளுக்கான டெண்டருக்கான (“ITT”) அழைப்பை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. ஒளிபரப்பு உரிமைகளுக்கான வெற்றிகரமான ஏலதாரர்களை நிர்ணயம் செய்வதற்கான ஏல செயல்முறை இன்று நடத்தப்பட்டது. அதில் வயாகாம் 18 நிறுவனம் வெற்றி பெற்றது.
இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட பகிர்வில், “வாழ்த்துகள் வயாகாம் 18. பிசிசிஐ மற்றும் இந்திய மகளிர் அணி மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி. அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2023-27) ரூ. 951 கோடிகளுக்கு உரிமத்தை பெற்றுள்ளீர்கள். இது மகளிர் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய விஷயமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிஸ்னி, சோனி, ஜீ ஆகிய நிறுவனங்களும் ஏலத்தில் போட்டி போட்டன. தொடக்க மகளிர் ஐபிஎல்லில் ஐந்து அணிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஐபிஎல் மகளிர் கிரிக்கெட் மார்ச் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொது செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை…
இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எப் பணத்தின் மதிப்பும் அதானியால் குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்…
இந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தமானது,…
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி…
கடந்த மூன்று நாட்களாக ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அவர் செய்தது தவறு என்று பாஜக அபிமானிகள்…
This website uses cookies.