இளம் பெண்கள், இளைஞர்கள் காதலிக்க உரிமை இருக்கிறது! – விஸ்வ ஹிந்து பரிஷ்த் தலைவர் பேச்சு!

இளம் பெண்கள், இளைஞர்கள் காதலிக்க உரிமை இருக்கிறது! – விஸ்வ ஹிந்து பரிஷ்த் தலைவர் பேச்சு!

காதலர் தினம் மேற்கத்திய கலாசாரம்; அதை இந்திய இளைஞர்கள் பின்பற்ற வேண்டாம் என, கேட்டு கொள்கிறோம். காதலர் தினத்தன்று, ஆணுறை விற்பனை அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காதலர் தினத்தில் ஈடுபடுபவர்கள், கற்பழிப்பு வரை செல்லும் ஆபத்து உள்ளது.எனவே, “காதலர் தினத்தை கொண்டாட வேண்டாம்’ என, பிப்., 14ல், பள்ளி, கல்லூரி, மக்கள் கூடும் இடங்களில், நாங்கள் பிரசாரம் செய்ய உள்ளோம். என்றெல்லாம் ஆர். எஸ். எஸ். அமைவ்வினர் சொல்லி வந்த நிலையில் இளைஞர்களும், பெண்களும் காதலிக்கலாம், அவர்கள் காதலிக்க உரிமை இருக்கிறது என்று விஸ்வ ஹிந்து பரிஷ்த் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலர் தினம் கொண்டாடக்கூடாது என்றும், காதலிப்பவர்களை விரட்டி, விரட்டி தாக்கியும், அவர்களை அவமானப்படுத்தும் முயற்சியிலும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள உள்ளிட்ட இந்து அமைப்பினர் ஒவ்வொரு ஆண்டும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பிரவீண் தொகாடியா கருத்து அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம், சண்டிகர் நகருக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா சென்றுள்ளார். வரும் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவது குறித்து அவர் ஆதரவாளர்களிடம் பேசியபோது, ”ஒரு ஆணும், பெண்ணும், காதல் வயப்படாவிட்டால் திருமணம் என்பது எப்படி நடக்கும். திருமணம் நடக்காவிட்டால், இந்த உலகில் வளர்ச்சி என்பது எங்கு இருக்கும். ஆதலால், இளம் பெண்கள், இளைஞர்கள் காதலிக்க உரிமை இருக்கிறது. அவர்கள் தங்களின் உரிமையைப் பெற வேண்டும்.காதலர்தினத்துக்கான இந்த செய்தியை நாம் பெற்ற பிள்ளைகளுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் சேர்த்துதான் கூறுகிறேன். அவர்களும் காதலிக்க உரிமை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இவரின் பேச்சு அங்கிருந்த விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக இந்தியாவில் காதலர் தினம் கொண்டாடப்படுவது இந்தியாவுக்கு எதிரானது, இந்து மதத்துக்கு எதிரானது என பிரச்சாரம் செய்துவரும் நிலையில், பிரவீண் தொகாடியாவின் பேச்சு அவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

error: Content is protected !!