May 15, 2021

‘வெட்டி பசங்க’ ஆடியோ லாஞ்ச் – ஹைலைட்ஸ்!

ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது

முரளி ராமசாமி

தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

‘போஸ்‘ வெங்கட்

‘வெட்டி பசங்க‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். விருதுகள் பெற்று, சிறந்த விமர்சனங்களைப் பெற்று மக்களிடையே என் படம் சென்றடையவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. சிறிய படங்களுக்கு ஆதரவு தருவோம் என்று சொல்வதைவிட செயல்வடிவில் செய்தால் தான் அப்படம் வெற்றியடையும். மஸ்தான் என்னுடைய குடும்ப நண்பர்.பி.ஆர்.ஓ பிரியா இன்று முதல் என்னுடைய தங்கையாக ஏற்றுக் கொள்கிறேன். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.

இசையமைப்பாளர் அம்ரிஷ் ,

கடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர் திரையரங்குகளில் நுழைந்ததும் கொரோனா வெளியே சென்று விட்டது.ஒரு படம் இரண்டு படம் இசையமைத்து விட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம். ஆனால் மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்து விட்டு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன் என்றார்.

நடிகர் மஹேந்திரன்,

மேடையில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கொரோனாவிற்கு பிறகு இது என்னுடைய முதல் மேடை. ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அனைவரும் கூறியதுபோல, நடிகர் விஜய்சேதுபதி யார் மனதையும் புண்படும்படி பேச மாட்டார். கேக் வெட்டிய சர்ச்சையில் அவர் இங்கு இருந்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருப்பார். அவருக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

கொரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா மட்டும் தான் என்பதை நான் உறுதியாக சொல்வேன். எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அத்தனை தொழிலாளர் களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட்ட தற்காக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாவு வீட்டில் குத்துப் பாட்டு போட்டவர் இப்படத்தின் இயக்குநராக மட்டும்தான் இருக்க முடியும். இப்படம் அறுசுவையும் சேர்ந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன். பொருளாதார ரீதியிலும் வெற்றி ரீதியிலும் இப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

கவிஞர் சினேகன்

மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப் பெற்றிருக்கிறது. ஒரு சினிமா வெற்றியடைந்தால் ஒரு குடும்பம் சந்தோசமாக இருக்கிறது. ஒரு படம் தோல்வியடைந்தால் ஒரு குடும்பம் கஷ்டப் படுகிறது. ஒரு படத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. வெளியே தெரியாமல் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள். அவரவர் சமூக தளங்களில் இப்படத்தைப் பற்றி பதிவு செய்து வையுங்கள் என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,

இப்படத்தில் எனது கதாபாத்திரத்தை கூறியதும் மிகவும் பிடித்து விட்டது. இப்படம் வெற்றி யடைய வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. சிறிய படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், அதைவிட திரையரங்குகளின் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் சிறிய படங்கள் வெற்றியடையும் என்றார்.

கதாநாயகன் வித்யூத் விஜய் பேசும்போது,

எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் மஸ்தானிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அப்புக்குட்டியுடன் பணியாற்றும் போது பல விஷயங்களை கற்று கொடுத்தார் என்றார்.

‘வெட்டி பசங்க‘ இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் இப்படத்தின் இசைத்தகடு வெளியிடப்பட்டது.