September 21, 2021

வெனிசுலாவில் தேர்தல்; ஐரோப்பிய ஒன்றிய தூதர்களுக்கான தலைவர் ஃபெடரிக்கா எச்சரிக்கை!

வெனிசுலாவில் தேர்தல் நடத்தப்படவில்லை எனில் அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தூதர்களுக்கான தலைவர் ஃபெடரிக்கா தெரிவித்துள்ளார். அந்நாட்டில் அதிபர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடையே அதிகாரி போட்டி நிலவி வருவதால் பல்வேறு நாடுகளிடமிருந்து அழுத்தம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த அறிக்கையை ஃபெடரிக்கா வெளி யிட்டள்ள நிலையில் வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு விதிக்கப்பட்ட 3 நாள் கெடுவை திரும்பப்பெற்று அதிபர் நிகோலஸ் மதுரோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெனிசுலா பொதுதேர்தலில் நிகோலஸ் மதுரோ 67% வாக்குகள் பெற்று வெற்றிபெற்று, பதவியை தக்க வைத்துக்கொண்டார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. எனினும், கடந்த 10ஆம் தேதி 2ஆவது முறையாக அந்நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவியேற்றுக்கொண்டார். இதன்பின்பும் வெனிசுலாவில் அதிபர் மதுரோவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெனிசுலா நாடாளுமன்ற சபாநாயகரான ஜுவான் குவய்டோ திடீரென்று தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபராக அறிவித்துக்கொண்டார். ஜுவான் குவய்டோவை வெனிசுலாவின் புதிய அதிபராக அமெரிக்கா, கனடா, பிரேசில், அர்ஜெண்டினா, கொலம்பியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்தன.

இதற்கு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில், ”வெனிசுலாவின் அமைதியை குலைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடுகிறது” என்று மதுரோ குற்றம்சாட்டினார். நிக்கோலஸ் மாரோவிற்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, ஈரான், சிரியா, கியூபா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

பின்னர், வெனிசுலாவின் ராணுவம் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. வெனிசுலாவில் ஏற்பட்ட இந்த அரசியல் கிளர்ச்சிக்கு அமெரிக்கா தான் காரணம் என்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம்சாட்டி வருகிறார். அதன் காரணமாக அமெரிக்க தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் அனைவரும் இந்த வாரத்திற்குள் வெனிசுலாவை விட்டு வெளியேறும்படி அதிபர் மதுரோ உத்தரவிட்டார். மேலும் அமெரிக்காவில் உள்ள அனைத்து வெனிசுலா தூதரங்க ளையும் மூடிவிட்டு அதிகாரிகள் அனைவரும் உடனடியாக நாடு திரும்பும்படியும் மதுரோ ஆணையிட்டார்.

ஆனால் அமெரிக்க அரசு இந்த உத்தரவை ஏற்கவில்லை. அதிபர் நிக்கோலஸ் மதுரோ தற்போது வெனிசுலாவின் அதிபர் இல்லை. அதனால் சட்டவிரோதமான அவரது உத்தரவை ஏற்கமுடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தூதரங்களில் உள்ள அத்தியாவசிய ஊழியர்களை தவிர மற்றவர்கள் நாடு திரும்பும்படி அமெரிக்க அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு அதிபர் மதுரோ இன்று கெடு விதித்துள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு திரும்ப தூதரக அதிகாரிகளுக்கு 3 நாட்கள் கெடு விதித்து இன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், இதனை ஏற்க டிரம்ப் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இடதுசாரி தலைவரான மதுரோ, வெனிசுலா அதிபராக ஏற்கமுடியாது என்பதில் திட்டவட்டமாக உள்ளது. இதன் காரணமாக, வெனிசுலா தலைநகரில் கராகஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து, இந்த கெடுவை வெனிசுலா அதிபர் நேற்று திரும்பப்பெற்றுக்கொண்டார். நேற்று மாலை வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ”அமெரிக்காவுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்குகிறோம். வெனிசுலாவில் அமெரிக்க தூதரகம் செயல்படுவதற்கும், அமெரிக்காவில் வெனிசுலா தூதரகம் இயங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிர்வாகத்திற்கு அவகாசம் வழங்குகிறோம்“ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில்தான் வெனிசுலாவில் தேர்தல் நடத்தப்படவில்லை எனில் அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தூதர்களுக்கான தலைவர் ஃபெடரிக்கா தெரிவித்துள்ளார். அந்நாட்டில் அதிபர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடையே அதிகாரி போட்டி நிலவி வருவதால் பல்வேறு நாடுகளிடமிருந்து அழுத்தம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த அறிக்கையை ஃபெடரிக்கா வெளியிட்டள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது