January 29, 2023

டந்த பத்து, பன்னிரண்டு வருடங்களில் தமிழ் சினிமாவில் ஒரு தனிப்போக்கு உருவாகி உள்ளது. வில்லனை ஹீரோவாக சித்தரிப்பது, குடி, கொண்டாட்டங்களில் திளைப்பது, அடி, தடியை ரசித்து செய்வது, அக்கறையின்மை, பொறுப்பின்மையை போற்றுவது, லட்சியங்களை மறுப்பது என இதை வரையறை செய்து கொண்டே போகலாம்.! குறிப்பாக ஒரு ஆண் ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலித்து இறுதியில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துவிட்டது, அரசியல் புரட்சி, தீயவர்களோடு மோதுவது போன்றவைகளையும் பிரம்மாண்டமாகக் காட்சி படுத்தும் போக்கே நிலவுகிறது. இச்சூழலில் தமிழ் சினிமாவின் வழக்கமான குடும்பக் கதையை அழகான ஹீரோ & ஹீரோயின், காமெடியன், வில்லன்சகிதம் ரெண்டு ஃபைட், நாலு சாங் என்ற விகிதாசாரத்தில் கொடுத்து ரசிகர்கள் ஒவ்வொருவரையும் கவர்கிறான் வேலன்.

 

கதை என்னவென்றால் செல்வாக்கான பிரபு & ஸ்ரீரஞ்சனி மகன் நாயகன் முகேன். தன் மகன் ரொம்ப நல்ல பையன் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், பள்ளி பொதுத் தேர்வில் பாஸ் ஆகவில்லை என்றறிந்து அதில் அப்செட்டாகி வேலனிடம் (முகன் ராவ்) அவர் அப்பா (பிரபு) பேசுவதை நிறுத்து விடுகிறார். பின்னர் நிஜமாகவே படித்து பாஸாகி அங்குள்ள காலேஜ் ஒன்றில் சேரும் முகேன் நம் சினிமா வழக்கப்படி சக மாணவி மீனாட்சி கோவிந்தராஜனை கண்டதும் காதலிக்க தொடங்கி இயக்குநர் சொன்னதை எல்லாம் செய்து நாயகியையும் காதலிக்க வைத்து விடுகிறார். இச்சுழலில் வில்லன் ஹரீஷ் பெராடியின் அதிரடிப் போக்கினால் , முகேனிற்கும் மற்றொரு நாயகி மரியாவிற்கு திருமணம் நடைபெறும் என பிரபு முடிவு செய்து விடுகிறார். அப்படியானால் முகேன் & மீனாட்சி காதல் என்னவாயிற்று என்பதுதான் வேலன்

பிக்பாஸ் முகேன், அறிமுகக் காட்சித் தொடங்கி பள்ளி வாழ்க்கை, கல்லூரி காலம் , காதல் அதிரடி என்று சகல தளங்களிலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் . நாயகி மீனாட்சி, கோலிவுட்டுக்கு புது வரவு. நடிக்கும் பக்குவம் முழுமையாக இன்னும் வரவில்லை என்றாலும்.திரையில் வரும் போதெல்லாம் கர்ந்து விடுகிறார் ஒரு ஹீரோயினுக்கு இதை விட வேறென்ன வேண்டும்? .இண்டர்வெல்லுக்கு பிறகு வரும் சூரி நிஜமாகவே மருபடியும் காமெடியான மிளிர்கிறார் அன்னை இல்ல சொந்தகாரரான பிரபு பாசமான, வீரமான, அமைதியான தந்தையாக அசத்துகிறார் . வில்லனாக ஹரீஷ் பெராடி , தம்பி, ராமையா, ஞான சம்பந்தம் ,ப்ராங்க் ஸ்டார் ராகுல்,, யூ ட்யூப் பிரிகிடா என பலரும் கதை ஓட்டத்தைப் புரிந்து தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்

கோபி ஜெகதீஸ்வனின் கேமராவில் பசுமையும், இளமையும் பளிச்- சிடுகிறது. கோபி சுந்தரின் இசையமைபிலான பாடல்களும், பின்னணி இசையும் வேலன் ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது.

இந்த சினிமா எனும் வலிமையான ஊடகத்தின் வழியே நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தொடர்ந்து முன்வைக்கும் கருத்துகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பது மறுக்க முடியாத யதார்த்தம். அதைக் கவனத்தில் கொண்டு அப்பா பாசம் மற்றும் குடும்ப உறவுகளை முன்னிலைப்படுத்தி இந்த நவீன உலகக் கட்டத்தில் ஒரு அறுசுவையான விருந்து போல் வேலனை படைத்த இயக்குநருக்கும், தயாரித்த கலைமகன் முபாரக்-க்கும் பாராட்டுகள்.

மொத்தத்தில் வேலன் குடும்பத்துடன் போய் கண்டுக் களிக்கத் தக்க படம்

மார் 3.25 / 5