May 15, 2021

இஸ்ரோ நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

இஸ்ரோ நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர் 4, அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 4, பர்சேஸ் ஸ்டோர்ஸ் ஆபிசர் 9 என 17 இடங்களும், மத்திய விண்வெளி துறையில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர் 2, அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 2, பர்சேஸ் ஸ்டோர்ஸ் ஆபிசர் 3 என 24 இடங்களும் உள்ளன.

கல்வித்தகுதி: அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பிரிவுக்கு பி.காம்., / எம்.காம்., படிப்புடன் மூன்றாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மற்ற பிரிவுக்கு எம்.பி.ஏ., மற்றும் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21.4.2021 அடிப்படையில் பொது பிரிவினர் 35, ஓ.பி.சி., பிரிவினர் 38, எஸ்.சி., / எஸ்.டி., 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 250.

கடைசிநாள்: 21.4.2021

விபரங்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு