பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்!

பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜகவின் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

அத்துடன் மேற்கு வங்காளம் அதைத் தொடர்ந்து கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக சட்டசபை தேர்தல் நடக்க கூடிய சூழ்நிலையில் இந்த முக்கிய பொறுப்பு வானதி சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தேசிய பொறுப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலேயே ஏற்கனவே தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவராக எல்.முருகன் மற்றும் துணைத் தலைவர் நியமனம் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தேசிய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.