மன்னிப்பு : ஆனாலும் கிழிஞ்ச ஜீன்ஸ் போடறது தப்புதான் – தீரத் சிங் யாதவ்~!

மன்னிப்பு : ஆனாலும் கிழிஞ்ச ஜீன்ஸ் போடறது தப்புதான் – தீரத் சிங் யாதவ்~!

உத்தரகாண்ட்டின் பாஜகவை சேர்ந்த முதல்வர் தீரத் சிங் ராவத் இன்னிக்கு , “நான்கு நாட்களுக்கு முன்னர் நான் தெரிவித்த ஒரு கருத்து யாருடைய மனதை புன்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜீன்ஸ் அணிவதில் தவறில்லை. ஆனால், கிழிந்தபடி ஜீன்ஸ் போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் நாம்தான் குழந்தைகளுக்கு நன்மதிப்பை கற்றுத்தர வேண்டும்” அப்படீன்னு சொல்லி இருக்கார்.

முன்னதா போன புதன் கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இம்முதல்வர் ‘இப்போதெல் லெலாம் கால் முட்டிகள் தெரியும்படி கிழிந்த ஆடை அணிந்திருப்பவர்கள்தான் தற்போதைய பணக்காரக் குழந்தைகள். இந்த கலாசாரம் எங்கிருந்து வருகிறது, வீட்டிலிருந்து வரவில்லை என்றால் பள்ளியிலா அல்லது பாடம் கற்றுத் தரும் ஆசிரியரிடமா? யாரிடம் தவறு இருக்கிறது.

பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதால், அவர்கள் முட்டிகளைக் காண்பிக்கலாமா? இது நல்லதா? அனைத்தும் மேற்கத்திய கலாசாரத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதன் காரணமாக விளைந்ததே. யோகா போன்றவற்றை அவர்கள் நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். நம்மைப் போன்று உடல் முழுக்க மூடியபடி ஆடைகளை அணிகிறார்கள், ஆனால் நாமோ நம் கலாசாரத்தை மறந்து அவர்களைப் பின்பற்றுகிறோம்’ என்று கவலையோடு தெரிவித்தார்.

உடனே உத்தரகாண்ட் முதல்வரின் கிழிந்த ஜீன்ஸ் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தனது கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் அணிந்த படத்தை நடிகைகள், பிரபலங்கள், அரசியல் கட்சியினர் அப்படி, இப்படி பலர் தங்களோட இணைதள கணக்குகளில் பகிர்ந்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஜா, நடிகை குல் பனாக், மாநிலங்களவை எம்.பி.யும், சிவசேனா தலைவருமான பிரியங்கா சதுர்வேதி, முன்னாள் ஃபெமினா மிஸ் இந்தியா சிம்ரன் கவுர் முண்டி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். அமிதாப் பச்சனின் பேத்தி கூட , ‘நான் கிழிந்த ஜீன்ஸ் அணிவேன். நன்றி… பெருமையுடன் இந்த கிழிந்த ஜீன்சை அணிவேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இப்படியாக தேசிய அளவில் ட்விட்டரில் #rippedjeans என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங் ஆன நிலையில் தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!