அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்?
அமெரிக்காவின் ”டிரஷரி டிபார்ட்மென்ட்’‘ உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை ”கண் காணிப்பு லிஸ்டில்” வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு பணங்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டை சேர்ந்த பணங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் வைக்கப்பட்டு இருக்கும். அந்த பணத்தின் சர்வதேச மதிப்பை, தாக்கத்தை வைத்து இது லிஸ்டில் சேர்க்கப்படும்.
இதனிடையே நம் இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜேர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து சந்தேகத்திற்குரிய அந்நிய செலாவணி கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்தியாவை வைத்து இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக, இந்திய ரூபாய் வரிசையாக குறைந்து கொண்டே வந்தது.
மிக முக்கியமாக ஜிஎஸ்டி வந்த பின் இந்திய ரூபாய் மதிப்பு பல பொருளாதார பின்விளைவுகள் காரணமாக கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாயை நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது. இன்னும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பை கணக்கிட்டு, ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், அதை பட்டியலில் இருந்து நீக்கிவிடுவோம் என்றுள்ளனர். அதன் பின்னர் அமெரிக்கா வின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அது சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.