September 20, 2021

உபி குழந்தைகள் இறப்பு + அதன் பின்னணி!

உபி குழந்தைகள் இறப்பு அதன் பின்னணி படித்தால் ஒவ்வொருவருக்கும்  வருத்தமாகத்தான் இருக்கும். அதே சமயம்  பல வருட பிரச்சனைகளை களைய சரியான முதல்வர் இப்போது இருக்கிறார் என்கிற போது கொஞ்சம் மூச்சு விட தோன்றுகிறது .குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் இருப்பு மட்டுமே காரணமல்ல.

பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரி, கோரக்பூர், உ.பி.யில், என்சிபாலிட்டிஸ் (மூளைஅழற்சி நோய்)  காரணமாக 63 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் இறந்திருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் 1978இலிருந்து குழந்தைகள் இந்த நோயால் இறக்க தொடங்கியது முதல் இன்று வரை கிட்டத்தட்ட 25 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர் (goo.gl/ixAvd7). 2005இல் 1,344 குழந்தைகள் இறந்ததால் அது கவனத்தை கவரத்தொடங்கியது.

640 குழந்தைகளின் இறப்பை என்டிடிவி 2013இல் (https://goo.gl/tzGbpK) வெளியிட்டிருந்தது.

2014இல் டி.என்.ஏ பத்திரிக்கை 10 ஆயிரம் இறப்புகளை (http://dnai.in/ccD3) குறிப்பிட்டு உபி அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்காததை எடுத்து கூறியிருந்தது.

2014இல் கோரக்பூர் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த யோகி ஆதித்தியநாத், பாராளுமன்றத்தில் இது பற்றி பேச முயற்சித்த போது காங்கிரஸ் தடுத்தது (https://goo.gl/Lnfr15).

யோகி ஆதித்தியநாத் முதல்வர் பொறுப்பேற்றதும் (https://goo.gl/epWNNY) இந்த பிரச்சினை பற்றி குறிப்பிட்டிருந்தார். பொது இடங்களை கழிப்பிடமாக உபயோகிப்பதால் இந்த நோய் பரவுவதாக உபி அரசு கூறியிருக்கிறது. அதை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசு இறங்கியிருக்கிறது. எனினும், இந்த முறை குழந்தைகள் இறந்ததற்கு முழுக்காரணம் அதிகார வர்க்கம் என்றே தோன்றுகிறது.

ஆக்ஸிஜன் வழங்கும் நிறுவனத்திற்கு இரண்டு ஆண்டுகளாக பணம் தராத நிலையில், அந்த நிறுவனம் சப்ளையை நிறுத்துவதாக அறிவிக்க, அரசும் உடனே தொகையை மருத்துவ கல்லூரிக்கு அளித்துள்ளது (ஆகஸ்ட் 7). ஆனால், மருத்துவ கல்லூரியின் முதல்வர் ராஜீவ் மிஷ்ரா அந்த தொகையை நிறுவனத்துக்கு அளிக்கவில்லை (என்ன செய்தார் என விசாரணை அமைக்க பட்டிருக்கிறது). குழந்தைகள் இறக்க தொடங்கியதும், ஆகஸ்ட் 11இல் அந்த தொகையை ரிலீஸ் செய்திருக்கிறார் ராஜீவ் மிஷ்ரா.

ராஜீவ் மிஷ்ரா ராஜினாமா செய்ததாக கூறியிருந்தாலும், அவரை உபி அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. இவர் பெரிய ஊழல் பேர்வழி என புகார்களும் ஆதாரங்களும் வெளிவர தொடங்கி உள்ளன. இன்னும் அதிர்ச்சி தரும் செய்தி, பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரி கோரக்பூரில் இறந்தவர்களின் எண்ணிக்கை:

– 2014இல் – தினசரி 19 இறப்புகள்.
– 2015இல் – தினசரி 22 இறப்புகள்.
– 2016இல் – தினசரி 19 இறப்புகள்.

அதிகார வர்க்கத்திலிருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் பொறுப்பெடுப்பதில்லை, தண்டிக்க படுவதும் இல்லை. இவர்களுக்கு உத்தரவாதமான அரசு வேலை (guaranteed government job), என்ன செய்தாலும் கேள்வி கேட்க முடியாத நிலை இருக்கும் வரை இவர்கள் திருந்த போவதில்லை.

அதிகாரவர்க்கம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

யோகி மீது முழு நம்பிக்கையுடன் இருக்கலாம் .

Selvam