அமித்ஷாவின் இந்தி தினம் கொண்டாட்ட பேச்சால் சர்ச்சை! -வீடியோ!

அமித்ஷாவின் இந்தி தினம் கொண்டாட்ட பேச்சால் சர்ச்சை! -வீடியோ!

ந்தி மொழியை பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறுவதில் ஏராளமான பொருள்கள் உள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிள்ளார். அமித்ஷாவின் பேச்சு மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயலாகும் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக தாய் மொழியுடன் சேர்த்து, அலுவல் மொழியான இந்தியையும் மக்கள் கட்டாயம் பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருப்பது பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டின் அலுவல் மொழியாக இந்தி தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும், தங்கள் தாய் மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். தாய்மொழியுடன் இந்தி இணைவதில் தான் இந்தியாவின் வளர்ச்சி அடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், சுய சார்பு என்பது நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களால் மட்டும் வருவதல்ல, அது மொழியையும் சாரும் என்று கூறினார். நமது பண்டையக் கால கலாசாரத்திற்கும், நவீன உலகிற்கும் இந்தி பாலமாக செயல்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தியை நம்முடன் இணைத்துக் கொண்டால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமை பலப்படும் என தெரிவித்தார். பிரதமர் மோடியால் சர்வதேச அளவில் இந்தி மொழியை பயன்படுத்தமுடியும் போது நாம் தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது..

error: Content is protected !!