September 18, 2021

யூனியன் பேங்கில் ஜாப் ரெடி!

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

சீனியர் மேனேஜர் (ரிஸ்க்) 60, மேனேஜர் (ரிஸ்க்) 60, மேனேஜர் பிரிவில் சிவில் 7, ஆர்க்கிடெக் 7, எலக்ட்ரிக்கல் 2, பிரின்டிங் டெக்னாலஜி 1, பாரக்ஸ் 50, சி.ஏ., 14, அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் டெக்னிக்கல் ஆபிசர் 26, பாரக்ஸ் 120 என மொத்தம் 347 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

அனுபவம்:

தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

வயது:

பதவிகளை பொறுத்து 20 – 30, 25 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்:

3.9.2021

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு