யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் ஜாப் ரெடி!

நாடு முழுவதும் கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட வங்கிச் சேவை கள் என்று சிறப்பு பெறும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா அங்கு ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக இருக்கும் 181 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலியிட விபரம்: யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பயர் ஆபிசரில் 1ம், எகனாமிஸ்டில் 6ம், செக்யூரிடி ஆபிசரில் 19ம், இன்டக்ரேட்டடு டிரஷரி ஆபிசரில் 15ம், கிரெடிட் ஆபிசரில் 122ம், பாரெக்ஸ் ஆபிசரில் 18ம் சேர்த்து மொத்தம் 181 இடங்கள் காலியாக உள்ளன.

தேவைகள் என்ன ?: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து தேவைகள் மாறுபடுகின்றன. இருந்த போதும் இந்த பதவிகள் அனைத்திற்குமே அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருப்பது குறைந்த பட்ச தேவையாகும். மேலும் ஒரு வருடம் முதல் ஐந்து வருடம் வரை பணியனுபவம் இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சிமுறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் : யூனியன் வங்கியின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.600/-

விண்ணப்பிக்க: யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 27.3.2019

விபரங்களுக்கு
 :  ஆந்தை வேலைவாய்ப்பு