December 8, 2021

குழந்தைகள் திருமணம் நடப்பதில் சென்னை முதலிடம்!

நம் நாட்டில் 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இந்தச் சட்டங்கள் இருந்த போதும், 50 சதவீதத் துக்கு மேல் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடப்பது வழக்கமாகிப் போன நிலையில் 2017ஆம் ஆண்டில் மட்டும் 1,636 குழந்தைத் திருமணங்கள் அரசால் தடுத்துநிறுத்தப்பட்டதாகவும்
தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் நடப்பதில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 5,480 குழந்தை திருமணம் நடந்துள்ளது என்றும் ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் குழந்தை திருமணத்தை நடத்திய இரு தரப்பு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மாப்பிள்ளை, திருமணத்தை நடத்தும் புரோகிதர், பூசாரி, நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள், அக்கம், பக்கத்தினர், முன்னின்று நடத்தும் சமுதாய தலைவர்கள், நிச்சயித்த நபர்கள், அமைப்புகள், புரோக்கர்கள், சமையலர் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும், குழந்தை திருமண தடைச்சட்டம், 2006ன்படி குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர். தவறு புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜாமினில் வெளியில் வர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப ஒன்றோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும். மேலும், குழந்தை திருமணம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி அத்திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும் என்றெல்லாம் சட்டம் இருந்தாலும் அண்மையில் குழந்தைகள் நலத்திற்கான இந்திய ஆணையம் மற்றும் யுனிசெப் சென்னை அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டில் தடுத்து நிறுத்தப்பட்ட 1,156 குழந்தை திருமணங்கள் அவர்களது ஒப்புதல் இன்றி நடத்தப்பட்டவை. அவர்களது வயது சராசரியாக 16 ஆக உள்ளது. குழந்தை திருமணத்திற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியால் 33 சதவிகிதம் பேருக்கும், காதல் திருமணத்தைத் தவிர்ப்பதற்காக 17 சதவிகிதம் பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அச்சம் காரணமாக 11 சதவிகிதம் பேருக்கும், குடும்ப உறுப்பினர் களின் உடல்நிலை காரணமாக 11 சதவிகிதம் பேருக்கும், காதலித்துத் திருமணம் செய்ததாக 95 சதவிகிதம் பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் தரித்ததால் 1 சதவிகிதம் பேருக்கு திருமண ஏற்பாடுகள்செய்யப்பட்டதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு இந்தியாவில் 18 லட்சம் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதில், உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், பீகார் இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதற்கடுத்தபடியாக, தமிழகத்தில் மட்டும் மொத்தம் 62,500 திருமணங்கள் நடந்துள்ளன. தமிழக அளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தை களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். கடந்தாண்டில் சென்னையில் மட்டும் 5,480 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. சென்னையில் புதிதாகக் குடியமர்த்தப்பட்டுள்ள இடங் களில்தான் திருமணம் அதிக அளவில் நடந்துள்ளன. இதேபோல, கோவையில் 3,025 பேருக்கும் மதுரையில் 2,840 பேருக்கும் குழந்தைத் திருமணம் நடந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நேஷனல் ஹெல்த் மிஷன் இயக்குநர் மற்றும் குழந்தைகள் நலத் துறை ஆணையர் தரேஸ் அஹமது கூறுகையில், “16 வயது முதல் 18 வரை உள்ள பதின்பருவப் பெண்களில் பெரும்பாலானோர் கர்ப்பம் தரித்துள்ளனர். இதில் அதிகமானவர்கள் திருமணமான வர்கள். இதன் மூலம் தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் திருமணம் நடந்துள்ளது தெரிகிறது” என்றார்.