இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இம்புட்டு எகிறி போச்சா?

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இம்புட்டு எகிறி போச்சா?

கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டின் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 விழுக்காடு வளர்வதாக கூறப் பட்டாலும் வேலை வாய்ப்பில் அது எதிரொலிக்கவில்லை. மேலும் வேலை தேடலுக்கும் வேலை கிடைப்பதற்குமான பெரிய அளவில் இடைவெளி அதிகரித்துவிட்டது. விளைவாக, 15 – 29 வயதான நகர இளைஞர்களில் ஆண்கள் 18.7 விழுக்காடும் பெண்கள் 27.2 விழுக்காடும் வேலை யில்லாமல் உள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில்  கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அளவு மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியல் துறையின் சர்வே மூலம் தெரியவந்துள்ளது .

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை இதுவரை இல்லாத அளவில் அதிகரித்து வருவதாக கடந்த ஜனவரி மாதம் சில தகவல்கள் கசிந்தன. இதனை சுட்டிக்காட்டி பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டிவந்தன. இதனையடுத்து இந்த தகவல் பொய்யானது எனவும், இப்படி ஒரு தகவல் ஆய்வில் வெளியாகவில்லை எனவும் கூறி மத்திய அரசின் நிதி ஆயோக் திட்ட வட்டமாக மறுத்து வந்தது

இந்நிலையில் ஜனவரி மாதம் வெளியான இத்தகவல் உண்மைதான் என்பது போல், தேசிய மாதிரி ஆய்வு புள்ளியல் நிர்வாகம் (NSSO) சர்வே ஒன்றை நடத்தியது. இந்த சர்வே முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-2018 நிதி ஆண்டில், நாட்டில் ஒட்டுமொத்த வேலை யின்மை சதவீதம் 6.1 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது, நகரங்களில் 7.8 சதவீத மாகவும், கிராமங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வேலையில்லாத ஆண்கள் சதவீதம் 6.2 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வேலையில்லா பெண்கள் சதவீதம் 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத உயர்வு என்பது கவனிக்கத்தக்கது.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக்கும்.

Related Posts

error: Content is protected !!