உள் குத்து – திரை விமர்சனம்! – இண்டர்ஸ்டிங்க்!!

உள் குத்து – திரை விமர்சனம்! –  இண்டர்ஸ்டிங்க்!!

தமிழ் சினிமாவில் புறையோடிப் போன கந்து வட்டிப் பிரச்னை, வட்டி கொடுக்கல் வாங்கலால் நடக்கும் அடிதடி, பழிவாங்கல் என்ற யூஷூவலான கதைக்களம்தான் என்றாலும், எடுத்த விஷயத்தை ரொம்ப இண்டர்ஸ்டிங்காக சொல்லி கவர முயன்று ஜெயித்தும் இருக்கிறார் ‘உள் குத்து’ இயக்குநர் கார்த்திக் ராஜு.கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்னால் இதே டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்கி நவம்பர் 2015ம் வருஷமே மொத்த ஷூட்டிங் முடிந்து தயாரானப் படம் பல்வேறு பிரச்னைகளால் தள்ளித் தள்ளி போய் தற்போது .சரியான சூழ் நிலையில் இந்த படம் ரிலீஸாகியிருக்கிறது.

அதாவது கடற்கரையில் அமைந்துள்ள மீனவ ஊரான ‘முட்டம்’ பகுதிக்கு வேலை தேடி வருகிறார் தினேஷ். பாலசரவணன் தயவில் அவரிடமே வேலைக்குச் சேர்கிறார் தினேஷ். பாலசரவணன் தங்கையான நந்திதா, தினேஷைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அந்தப் பகுதி தாதாவான சரத் லோகித்சவா மகனான திலீப் சுப்பராயனை, தினேஷ் கொலை செய்து விடுகிறார். அடுத்து சிலரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார். தினேஷின் கொலை முயற்சிகளைப் பார்த்த நந்திதா அதிர்ச்சியடைந்து தினேஷிடம் கேட்கிறார். தினேஷ் எதற்காக அந்த ஊருக்கு வந்தார், ஏன் கொலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆரம்பத்தில் கொஞ்சம் டல்லாக தொடங்கும் கதையோட்டம் தினேஷ் அதிரடி ஆக்‌ஷன் காட்ட தொடங்கிய போது விறுவிறுப்பு, படம் இறுதிவரை தொடர்கிறது. அதிலும் இடைவேளை எதிர்பார்க்காத நேரத்தில் விட்டு விட்டு வெளியே போய் அடுத்து இப்படித்தான் நடக்கும் என சக நண்பர்கள் யூகம் செய்து சொன்னதையெல்லாம தாண்டி, தன் பழைய திருடன் போலீஸ் பாணியில் புதுசாக யோசித்து அடடே சொல்ல வைத்துள்ளார் இயக்குநர்.

‘விசாரணை’படத்திற்குப் பிறகு நடித்ததால், தினேஷின் நடிப்பில் அந்தப் பாதிப்பு கொஞ்சம் தெரிகிறது. ஆனால், அடி தடி காதல் என்று பல முகம் காட்ட வேண்டியவர் ஏனோ இறுக்கமான ஃபேசில் உலா வந்து அப்செட் செய்கிறார். நந்திதா ஸ்வேதா அழகாக வந்து அழகாக நடித்து விட்டு போகிறார். பால சரவணனுக்கு, படம் முழுக்க வருகிற கேரக்டர். ‘சுறா சங்கர்னா சும்மாவா’ என்று சிரிக்க வைப்பவருக்கு கிடைத்த சான்சை முழுசாக பயன்படுத்தி தனிக் கவனம் பெறுகிரார். .

அதிரடி வில்லன்களாக திலீப் சுப்பராயன், சரத் லோகிதாஸ்வா இருவருமே அற்புதமாக மிரட்டியிருக்கிறார்கள். அதிலும் கந்து வட்டிக் கொடுமையின் போக்கைக் காட்ட வட்டி கொடுக்காத ஒரு குடும்பம் காலையி்ல் இருந்து மாலைவரையிலும் மகளை அடமானம் வைக்குக் காட்சி பகீரென்கிறது. அதே சமயம் வில்லன் கபடி விளையாட்டுக்கு அழைத்து வேண்டாதவனை கொல்வது முதலிலேயே கொஞ்சம் லெந்தியாக காட்டி விட்டு மறுபடியும் அதே சீன் வரும் போது போர் அடிக்கிறது

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் அழகான கடற்கரை அழகாகவே தெரிகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஆக ஆரம்பத்திலேயே சொன்னது போல வழக்கமான டைப்பிலான கதைதான் என்றாலும், விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றுள்ள இயக்குநர் இதை விட பெட்டரான படமொன்றை தருவார் என்ற நம்பிக்கையை தந்துள்ளார் என்பதுதான் அடிசினல் தகவல்.

மார்க் 5 / 3

error: Content is protected !!