October 27, 2021

மோசடி மன்னன் நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்..!

நம் நாட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,758 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாடு தாப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கி மோசடி செய்ததாக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கு விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் நிரவ் மோடி மீது சுமத்தப்பட்ட புகார்களுக்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக கருத்து தெரிவித்தது.

நீதிமன்ற நடவடிக்கைகள் அடங்கிய கோப்பு பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்துக்கு இலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது அந்த ஆவணங்களை பரிசீலித்த பிரிட்டன் உள்துறை அமைச்சக செயலாளர் பிரித்தி பட்டேல் நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒப்புதல் தந்தார் இந்த தகவலை புதுடில்லியில் சிபிஐ அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு எதிராக பில்டர் உயர்நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய 14 நாட்கள் அவகாசம் உண்டு.

வைர வியாபாரி நிரவ் மோடி பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாவிட்டால் 28 நாட்களில் அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பது நீதிமன்ற விதியாகும்.

மும்பையில் ஆர்தர் ரோடு சிறைச்சாலை போதுமான அடிப்படை வசதிகளுடன் இல்லை என்றும் அங்கு தனக்கு பாதுகாப்பு கிடைக்காது என்றும் வைர வியாபாரி நிரவ் மோடி பிரிட்டன் கோர்ட்டில் ஆட்சேபனை தாக்கல் செய்தார் அந்த ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.