விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது!- இங்கிலாந்து கோர்ட் தீர்ப்பு!

விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது!- இங்கிலாந்து கோர்ட் தீர்ப்பு!

இங்கிலாந்தில் விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனவும் தடை செய்யப்  பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத்தை நீக்கியும் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனாலும் இங்கிலாந்து அரசின் முடிவுக்குப் பின்னரே தீர்ப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி தமிழ் ஈழ அரசு சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இந்த கடிதத்தை அப்போதைய இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளராக இருந்த சஜித் ஜாவித் நிராகரித்தார். இதனை தொடர்ந்து இந்த தடையை எதிர்த்து தமிழ் ஈழ அரசு சார்பில் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஒராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் போது விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை தமிழ் ஈழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை இன்று இங்கிலாந்து நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது என தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத்தை நீக்கியும் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனாலும் இங்கிலாந்து அரசின் முடிவை பொறுத்தே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை விலகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!