September 21, 2021

மோடி கேபினெட்டிலிருந்து ரெண்டு மினிஸ்டர்ஸ் ரிசைன்!

மோடியின் மத்திய அமைச்சரவையில் கடந்த வாரம் 19 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி, அமைச் சரவையில் முக்கிய மாற்றங்களையும் செய்திருந்தார். அதன்படி மனிதவள மேம்பாட் டுத் துறையில் இருந்து ஸ்மிருதி இரானி, ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று காலை கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜவடேகர் மனித வள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சரானார்கள்.

modi cab july 11

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக மாற்றப்பட்டிருந்தார். இத்துறையை இது வரை நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூடுதலாக கவனித்து வந்தார். வெங்கய்ய நாயுடு தற்போது தகவல் ஒலி பரப்புத் துறையுடன் ஏற்கெனவே கவனித்து வந்த நகர்ப்புற வளர்ச்சித் துறையையும் கவனிப்பார் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் புதிய அமைச்சராக அனந்தகுமார் நியமிக்கப்பட் டுள்ளார். சட்ட அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். தொலைத்தொடர்பு துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் வசம் கூடுதல் பொறுப்பாக சட்டத் துறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படிருந்தது.

இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துள்ளனர். மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்தவர் நஜ்மா ஹெப்துல்லா. அதேபோல், மத்திய கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஜி.எம்.சித்தேஸ்வரா.

இன்று அதிரடியாக நஜ்மா ஹெப்துல்லா மற்றும் ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதற்கான கடிதத்தை, ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியிடம் அவர்கள் வழங்கினர். அவர், இவர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, இணை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்விக்கு சிறுபான்மையினர் நலத்துறை தனிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சராக பாபுல் சுப்ரியோல் நியமிக்கப்பட்டுள்ளார்.

வயது முதிர்வு மற்றும் தங்களது துறை சார்ந்த பணிகளில் தொய்வு போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் நஜ்மா ஹெப்துல்லா, ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக நியூஸ் வந்துள்ளது