குடியரசு துணைத் தலைவர் ட்விட்டர் + அடுத்து ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ப்ளூ டிக் நீக்கம்!

குடியரசு துணைத் தலைவர் ட்விட்டர் + அடுத்து ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ப்ளூ டிக் நீக்கம்!

ந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்த ‘ப்ளு டிக்’ திடீரென்று நீக்கப்பட்டு சர்ச்சையான நிலையில் மீண்டும் புளு டிக் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது

தற்போது மோடி அரசுடன் முரண் போக்கைக் கொண்டுள்ள ட்விட்டர் சரி பார்க்கும் கணக்குகளில் அரசாங்க நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பு, செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கேமிங், ஆர்வலர்கள், அமைப்பாளர்கள் மற்றும் பிற செல்வாக்கு மிக்க நபர்கள் உள்ளனர். சரிபார்க்கப்பட்ட (verified) கணக்குகள் முழுமையற்றோ, பயன்படுத்தப்படாமலோ இருந்தால் அதன் சரிபார்க்கப்பட்ட சின்னம் (badge) நீக்கப்படும் என்றும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் தனது விதிகளில் ஒன்றாக வைத்துள்ளது. நீல சரிபார்ப்பு பேட்ஜ் ட்விட்டர் பயனரின் அடையாளம் உண்மை மற்றும் நம்பகமானது என்று மற்ற பயனர்களுக்கு அறிவிக்கிறது

இந்நிலையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு 2 ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றார். ஒன்று அவரது சொந்த பேரில் ஒரு கணக்கு, மற்றொன்று அலுவலக ரீதியில் பயன்பாட்டில் உள்ள அக்கௌன்ட். இதில் அவரது பெயரில் அவருக்கென உள்ள தனிப்பட்ட அக்கௌண்டில் ( @MVenkaiahNaidu ) 1.3 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். மற்றொன்று அலுவல் ரீதியான பக்கத்தில் ( @VPSecretariat ) 931K பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

இதில் திடீரென அவரது தனிப்பட்ட அக்கௌன்ட்டில் உள்ள ப்ளூ டிக்கை ட்விட்டர் நீக்கம் செய்துள்ளது. இப்படி ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டதற்கு இணையவாசிகள் ட்விட்டருக்கும், மத்திய அரசிற்கும் போட்டி நிலவி வருவதாகவும், எதன் அடிப்படையில் நீக்கினீர்கள்.. விளக்கம் ஏதும் ட்விட்டர் தெரிவித்ததா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கிற்கு மீண்டும் ‘ப்ளு டிக்’ வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக்-கை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!