ட்விட்டரில் அரசியல் சமந்தமான விளம்பரங்களுக்கு இடமில்லை!

ட்விட்டரில் அரசியல் சமந்தமான விளம்பரங்களுக்கு இடமில்லை!

அமெரிக்கா, இந்தியா என்றில்லை உலகம் முழுக்க உள்ள அரசியல்வாதிகளால் தவறான தகவல் கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுகின்றன என விமர்சனம் வந்ததையடுத்து, ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே ‘ட்விட்டரில் அடுத்த மாதம் முதல் அரசியல் விளம்பரங் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளார். இது ஜனநாயகக் கட்சியினரின் பாராட்டை யும் டொனால்ட் ட்ரம்பின் ஜனாதிபதி பிரச்சாரத்திலிருந்து அவதூறை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஃபேஸ்புக்கில் இந்த தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்.. இனி ட்விட்டரில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப்படும் என்று டுவிட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள் குறித்து தவறான தகவல்கள் பரவுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜாக் டார்ஜி , ‘ஆன்லைன் விளம்பரங்கள் வணிகர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்தததாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் அதேசமயம் அரசியலுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விளம்பரங்கள் கோடிக்கணக்கான வாக்காளர்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

எனவே டுவிட்டரின் புதிய கொள்கைப்படி வரும் நவம்பர் 22ம் தேதி முதல் டுவிட்டரில் அரசியல் பிரமுகர்கள், கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும்.

அரசியல் தொடர்பான தவறான செய்திகள், போலி செய்திகள், வதந்திகள், டேட்டா திருட்டு ஆகியவற்றை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ட்விட்டரின் புதிய கொள்கை குறித்த விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் ஜாக் டார்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையால் ட்விட்டர் நிறுவனத்திற்கு பெரியளவில் நஷ்டம் ஏற்படாது. இது நிதி சார்ந்த முடிவல்ல. கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு என்று அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் கூறியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தின் இந்த முடிவை ஹிலாரி கிளிண்டன் வரவேற்றுள்ளார். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் ஜனநாயகத்திற்கு இது தான் சரி என்று அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

ஆனால் அதிபர் டிரம்பின் தேர்தல் பிரச்சார மானேஜர் பிராட் பார்ஸ்கேல் ‘‘கோடிக்கணக்க்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்தக்கூடிய முட்டாள்தனமான முடிவு’’ என டுவிட்டரை விமர்சித்துள்ளார்.

இதேபோல் ஆளுங்கட்சியான குடியரசு கட்சியை கடுமையாக விமர்சிக்கும் பாகுபாடு மனப்பான்மை கொண்ட ஊடகங்கள் வெளியிடும் விளம்பரங்களையும் டுவிட்டர் தடை செய்யுமா ? என்று பிராட் பார்ஸ்கேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே சமயம் ட்விட்டரின் இந்த முடிவை பேஸ்புக் பின்பற்றாது என தெரியவந்துள்ளது. முகநூலில் அரசியல் விளம்பரங்கள் அனுமதிக்கப்படும். உண்மை என்னவென்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும் என தான் கூறிய கருத்தில் இருந்து முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பின்வாங்குவதாக இல்லை.

அரசியல் விளம்பரங்களால் பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிக வருவாய் கிடைப்பதில்லை. ஆனால் அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்ய வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம் என நான் நம்புகிறேன். அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதித்தால் அது பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமானதாக அமையும் என்று மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!