ட்விட்டரில் எடிட் வசதி வருது ; கூடவே இன்னொரு வசதியும் வருது!

ட்விட்டரில் எடிட் வசதி வருது ; கூடவே இன்னொரு வசதியும் வருது!

இப்போது உலக மக்களில் குறிப்பாக விஐபி-க்களில் எக்கச்சக்கமானோர் உபயோகிக்கும் ட்விட்ட ரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பலருக்கு, அதிகம் தேவைப்படும் அம்சமான டுவிட்களை எடிட் செய்யும் வசதி வர இருக்கும் சூழலில் அந் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக மேலும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ஆம்.. நவீனமயமாகி வரும் மக்களிடையே பெருகிவரும் சமூக வலைதளப் பயன்பாடுகளால் சமூக வலைதள நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகின்றன. அந்த வகையில் முன்னணி சமூக வலைதளங்களுள் ஒன்றான ட்விட்டரும் தொடர்ந்து பல புதிய வசதிகளை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது.

அந்த லிஸ்ட்டில் தற்போது புதிதாக இணைந்துள்ளது ட்ரெண்டிங் டாப்பிக்கை ஒரே சர்ச்சிங்கில் தேடிக்கொள்ளும் புதிய வசதி.

அதன்படி ட்விட்டரின் மேல் பக்கத்தில் உள்ள சர்ச்சிங் எனும் ஆப்சனைக் க்ளிக் செய்தாலே நியூஸ், ஸ்போர்ட்ஸ், ஃபன், எண்டெர்டைன்மெண்ட் என எல்லா பிரிவு ட்ரெண்டிங்குகளும் தனித்தனியாக ஸ்க்ரீனில் வந்துவிடும். எனவே ட்ரெண்டிங் டாப்பிக்குகளைத் தனியாகப் போய் தேடவேண்டிய அவசியம் இனி ஏற்படாது.

ட்விட்டர் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதி நேற்று (நவம்பர் 14) முதல் நடைமுறைக்கு வந்துவிட்டாலும் இந்த வசதி இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. தற்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி உள்ளது. விரைவில் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!