Exclusive

புதிதாக டிவிட்டருக்கு வருபவர்களை வழிநடத்தும் தளம்!

டிவீட் ஆர் பே.மீ ’ (https://tweetorpay.me/) என அந்த புதிய இணையதளத்தின் முகவரியே கொஞ்சம் வம்பானதாக இருக்கிறது. டிவீட் செய்யுங்கள் அல்லது எங்களுக்கு பணம் கொடுங்கள் எனும் விதமாக அமைந்திருக்கும் இந்த தளத்தின் நோக்கம், புதிதாக டிவிட்டருக்கு வருபவர்களை தொடர்ச்சியாக பதிவிட வைப்பது. அப்படி தொடர்ச்சியாக பதிவிடாத போது, இந்த தளம் பயனாளிகளிடம் இருந்து ஐந்து டாலர்களை கழித்துக்கொள்ளும்.

ஒருவர் எந்த நோக்கத்திற்காக வேண்டுமானாலும் டிவிட்டரை பயன்படுத்தலாம். ஆனால், டிவிட்டரை பயன்படுத்துவதற்கான இலக்கை அடைவதற்கு தொடர்ந்து பதிவிட்டு வருவது மிகவும் அவசியம். இதை செய்தால் மட்டுமே மற்ற எந்த உத்திகளும் பலன் அளிக்கும்.

ஆனால் சீராக பதிவிடுவது என்பது அத்தனை எளிதல்ல. ஆரம்ப உற்சாகம் உலர்ந்த பிறகு பதிவிடுவதில் சுணக்கம் ஏற்படலாம் அல்லது டிவிட்டர் கணக்கையே மறந்து போக நேரலாம். இவ்வாறு நிகழாமல் திட்டமிட்டபடி தொடர்ந்து டிவிட்டரில் பதிவுகளை வெளியிட வழி செய்யும் வகையில் இந்த தளம் நுஸைர் ( @NuzairNuwais) என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கான தனிப்பட்ட டிவிட்டர் பயிற்சியாளர் என இந்த சேவையை அவர் வர்ணிக்கிறார். தினமும் ஒரு முறை டிவிட்டர் செய்வது அல்லது நாள்தோறும் மூன்று டிவீட்களை பதிவிடுவது என்பது போன்ற இலக்குகளை தேர்வு செய்து கொண்டு இந்த இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டால், மாத இறுதியில் உங்கள் செயல்பாட்டை கவனித்து இலக்கை தவறவிட்டால் உங்களிடம் இருந்து ஐந்து டாலர்களை பிடித்தம் செய்து கொள்கிறது.

டிவீட் செய்யாவிட்டால் ஐந்து டாலர் இழப்பு என்பது பயனாளிகளை தொடர்ந்து டிவீட் செய்ய வைக்கும் என்பது நுஸைரின் எண்ணம். இது ஒருவிதமான எதிர்மறையான தூண்டுகோள் என்கிறார்.

இடைப்பட்ட காலத்தில் பயனாளிகள் தொடர்ந்து டிவீட் செய்யும் வகையில், குறும்பதிவுகளை முன் கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்யும் வசதியை அளிப்பதோடு , இமெயில் நினைவூட்டலையும் வழங்குவதாக தெரிவிக்கிறது.

புதிய டிவிட்டர் பயனாளிகளுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும் என்கிறார் நுஸைர். புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் இது போன்ற இலக்கு சார்ந்த சேவைகளை கொஞ்சம் புன்னகையோடு வரவேற்கலாம்.

சைபர்சிம்ஹன்

aanthai

Recent Posts

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

“உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என…

1 day ago

“ 1947 ஆகஸ்ட் 16” திரைப்பட அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது!

நம்மைப் பெருமைப்படுத்தும் ஒரு காலகட்டத்தின் கதை! ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டது.…

1 day ago

பரியுடைமை (Freedom) உடைக்கப்பட்டு இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட ஊடகவியலாளரின் மகள் நான்…மெஹனாஸ் கப்பன்!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த அக்டோபர் மாதம் தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இது…

1 day ago

“விதியோடு ஒரு ஒப்பந்தம்”!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு…

2 days ago

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி!- முழு விபரம்!

நம் நாட்டில் பாலின சமத்துவமின்மை குறைந்து வருகிறது, சமூக அரசியல் செயல்பாடுகளில் அதிகரித்துவரும் பெண்களின் பங்கெடுப்பு தீர்மானிப்பவையாக உள்ளது. நாட்டின்…

2 days ago

இந்தியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த “விடுதலைத் திருநாள் நல்வாழ்த்து”.!

பெருவெளியின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் மிகச்சிறிய வன்தான், ஆனால் அவன்தான் பேரண்டத்தை எதிரொலிக்கிற கண்ணாடி, அழகுற அதனை சித்தரிக்கும் கவிஞன்,…

2 days ago

This website uses cookies.