துருக்கியில் நிலநடுக்கம் + சுனாமி!
துருக்கியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது.
இதுகுறித்து துருக்கி மீட்புப் பணி அதிகாரிகள் கூறும்போது, “துருக்கியில் இன்று (வெள்ளிக் கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது. ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🦉மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. ஏகியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கு பகுதிகள் குலுங்கின. பல கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. #TurkeyEarthquake pic.twitter.com/9qov6LpuUS
— Àanthai Répørter🦉 (@aanthaireporter) October 30, 2020
துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை என்று துருக்கி அரசு தெரிவித்துள்ளது.