October 21, 2021

டியூப் லைட் – திரை விமர்சனம்!

சற்றேறக்குறைய நம் தமிழ் சினிமாவுக்கு பல்வேறு நோய்கள் பாதித்துள்ளன. குறிப்பாக ரிலீஸாகும் முன்னரே ஆன் லைனில் வெளியாகும் போக்கு, திருட்டு விசிடி, க்யூப் கொள்ளை , விநியோகஸ்தர்களின் கூட்டுச் சதியால் லாபமின்மை என்பது போன்ற தீர்க்க இயலாத நோய்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இப்போதெல்லாம் படத்துக்கான தலைப்புக்கே யோசிக்க மறுத்து பழைய டைட்டிலை தேடிப் பிடிக்கும் போக்கு நிலவுகிறது. அத்துடன் படத்துக்கான கதையை தேர்ந்தெடுப்பதிலும், அதை பக்காவான திரைக்கதையாக வடிவமைப்பதிலும் அவ்வள்வு ஆர்வம் காட்டாத நிலையும் காணப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் ஒரு சிம்பிளான கதைக் கருவை எடுத்துக் கொண்டு நகைச்சுவையுடன் சொல்வதில் பாதி அளவு வென்று விட்டது ‘ டியூப் லைட்’ திரைப்படம்

கதைப்படி நாயகன் ஒரு விபத்தில் அடிபட்டு, கேட்டல் குறைப்பாடு ஏற்படுகிறது. அதாவது சத்தத்தை அவரது மூளை உள்வாங்கிக் கொள்ள அடிசினலாக சில பல நொடிகள் ஆகுமாம். இந்த நொடி நீங்க நாயகனிடம் ஹலோ சொன்னால், அது அவர் காதில் நுழைந்து முளைக்கு சேதி செல்லி ரியாக்ட் பண்ண நிமிட கணக்கு கூட ஆகும். சிம்பிளாக சொவதானால்‘சாவு செய்தி சொன்னால் கருமாதி அன்று தான் அவருக்குக் கேட்கும்’ என்பதால், அவருக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் (பாண்டியராஜன்) “டியூப்லைட்” என நாயகனுக்குப் பட்டப்பெயர் சூட்டி ட்ரீட்மெண்ட் செய்து வருகிறார்.இப்படியான ஹாஃப் நாயகனுக்கு ஒரு பெண்ணைக் கண்டதும் காதல் வருகிறது. அந்த காதலில் நாயகன் ஜெயித்தாரா? குறைபாடு சரியானதா? என்பதுதான் படத்தின் மிச்சக்கதை

ஆனாலும் ஒட்டு மொத்த கதையும் நாயகனைச் சுற்றியே நகர்கிறது. அதை புரிந்து பயணிக்கிறார் ஹீரோ. குறிப்பாக அவரை அறிமுகப் படுத்து போது அவரின் பெண் வேஷ ஆட்டமும், படம் முழுக்க அவருக்கு ஏற்படும் குறைப்பட்டினை தன் முகத்தில் பிரதிபலிக்கும் விதத்திலும் அசத்தியுள்ளார். ராம் எனும் இந்த டியூப்லைட் கேரக்டரில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் இந்த்ரா. கார்பொரேட் கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்களின் ஆளுமைத் திறனை வளர்க்க ஒரு நூதன பயிற்சியை நாடகம் மூலம் அளிக்கும் ப்ரு பயிற்சியாளராகப் பணிபுரிந்தவர். அத்துடன் பல விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ள இவர் தான் இப்படத்தின் இயக்குநரும் கூட! அதோடு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது எக்ஸ்ட்ரா சேதி[email protected] .

படத்தில் டாக்டராக முக்கியமான பாத்திரத்தில் வருகிறார் R.பாண்டியராஜன். அவரது ஃப்ளாஷ்-பேக் அவ்வளவாக எடுபடவில்லையென்றாலும், மருத்துவராக அவர் மனம் குமுறும் பாத்திரத்தை நிறைவாகவே செய்துள்ளார். அதே சமயம் கிளைமேக்சில் அவரது மகன் என்று ஓப்பனிங் சீனில் அறிமுகமான ஒருவரை அறிமுகப்படுத்தி படத்தை முடிக்க கொஞ்சம் திண்டாடி இருக்கிறார் இயக்குநர்.

ஹேமா எனும் பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார் மோலிவு அழகி அதிதி. தமிழில் கதாநாயகியாக இதுதான் முதல் படம் எனினும், மலையாளத்திலும் தெலுங்கிலும் ஏற்கெனவே நாயகியாக நடித்துள்ளார். ‘ஆர்ட் தெரபி’யில் ஆர்வமுடைய நபராக வருகிறார். ஆனால், அந்த தெரபிக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு மனதில் பதிய வைத்திருக்கலாம். சுவாரசியமான, நம்பிக்கையை ஏற்படுத்தும் கதைக்கருவைப் பிடித்த இந்த்ரா, திரைக்கதையில் அதைக் கோட்டை விட்டுவிட்டார். ஆரம்பித்திலேயே இது சிரிக்க மட்டும்தான் என்ற உணர்வை கொடுக்கும் படமாகவே ஆரம்பித்துள்ளார். ஆனால் இடைவேளைக்கு பிறகு, ட்விட்ஸ் என்ற பெயரில் திரைக்கதையை சின்னாபின்னமாக்கிறார். அதிலும் நாயகிக்கு நாயகன் இருவரும் கிளைமாக்ஸில் சைக்கிளில் போய்க் கொண்ண்ண்ண்ண்ண்டே படத்தை ஜவ்வாக இழுத்து கடுப்பேத்தியதை தவிர்த்திருக்கலாம் என்றாலும் ரசிக்கக் கூடிய பல அம்சங்களை சொல்லியிருக்கும் டியூப் லைட் பாஸ் மார்க்தான்