கிரீன்லாந்து தீவு விற்பனைக்கல்ல – ட்ரம்ப் ஆசைக்கு ஆப்படித்த டென்மார்க்!

கிரீன்லாந்து தீவு விற்பனைக்கல்ல – ட்ரம்ப் ஆசைக்கு ஆப்படித்த டென்மார்க்!

டென்மார்க் நாட்டிடமிருந்து கிரீன்லாந்து பனித்தீவை வாங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க உள்ளூர் பத்திரிக்கைகளில் தகவல்கள் வெளியான நிலையில் எங்கள் நாடு விற்பனைக்கல்ல என்று டென்மார்க் அறிரிவித்து உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.

வட அமெரிக்காவில் உள்ள கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு நாடு. இது அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் கடல்களின் நடுவே உள்ள இது டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு தன்னாட்சி நாடுகளில் ஒன்று. கிரீன்லாந்து என்றதும் பசுமையான தேசம் என நினைத்து விட வேண்டாம். இந்நாட்டின் பரப்பளவில், நான்கில் மூன்று பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. அண்டார்டிக்கா வுக்கு அடுத்து பனிக்கட்டிகள் அதிகமுள்ள பகுதி கிரீன்லாந்து தான். இந்நாட்டின் மக்கள்தொகை 56,500. இதுதான் உலகின் மக்கள் தொகை அடர்த்தி குறைந்த நாடு. கிரீன்லாந்தில் வெப்பநிலை மைனசில் தான் இருக்கும். நாட்டின் தெற்குப் பகுதியில் மட்டும் சற்று வெப்பநிலை இருக்கும். இங்கு தான் பெரும்பான்மை மக்கள் வசிக்கின்றனர்.தலைநகரான நுாயூக் நகரத்தில் மைனஸ் 11 முதல் 10 டிகிரி செல்சியஸ் இருக்கும்

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து. முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும். அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் அலுவல் ரீதியாக டென்மார்க் செல்ல உள்ளார். இந்நிலையில் அவர் கிரீன்லாந்து தீவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதனிடையே கிரீன்லேண்ட் அரசு தன் இணையதளத்தில் “கிரீன்லேண்ட் தீவு விற்பனைக்கல்ல” என்று பதில் அளித்துள்ளது.. இது தொடர்பாக ட்ரம்புக்கு நெருக்கமானவர் ஒருவர் ‘ட்ரம்ப் இதில் ஆர்வம் காட்டியது உண்மை ஆனால் அவர் சீரியஸாக அதில் இருக்கிறாரா என்பது ஐயமே இது தொடர்பாக இவர் குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடம் பலமுறை பேசி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் ட்ரம்ப் இதனை சீரியசாகக் கூறுவதாக அவர்கள் நம்பவில்லை என்பதே உண்மை’ என்றார் பெயர் கூற விரும்பாத இந்த நபர்.

அதே சமயம் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான விமான தளம் ஒன்று கிரீன்லாந்து தீவில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய ரேடார் மையமாக இருக்கும் இந்த தளத்தில் 600 வீரர்கள் உள்ளனர். மேலும் டென்மார்க் அதன் சுயராஜ்ய பிரதேசங்களுக்கு நிதி ஆதாரங்களை பெற முயற்சித்து வருவதாக கடந்த ஆண்டு ட்ரம்ப் கூறியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதே போன்று 1946-ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கிரீன்லாந்து தீவை வாங்க முற்பட்டார். ஆனால் அவரது அந்த பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!