June 13, 2021

பலான நடிகைக்கு ட்ரம்ப் நஷ்ட ஈடு! – அமெரிக்க கோர்ட் உத்தரவு!

பலான எனப்படும் போர்னோ நடிகை டேனியல்ஸ் 44,100 டாலர் நீதிமன்ற வழக்கு கட்டணமாக செலுத்தும்படி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிபதி ராபர்ட்ஸ் பிராடு பெல்ட் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைக்கும் பரவலாக பல்வெறு இணையதளத்தில் வெளியாகும் போர்னோ படங்களில் நடித்து வந்தவர் டேனியல்ஸ். இவருடன் பத்தாண்டுகளுக்கு மேலாக பாலுறவு வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு 11 நாட்கள் முன்னதாக போர்னோ நடிகை தனியல்ஸ் உடன் பர்சனல் வழக்கறிஞர் கோஹென் ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். அந்த ஒப்பந்தத்தில் கூட டிரம்ப் பெயர் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. டேனியல்ஸ் – ட்ரம்ப் ரகசிய வாழ்க்கை பற்றிய தகவல்களை வெளியிடாமல் இருக்க ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது இதற்காக130,000 டாலர் பணத்தை கோகஹென் டேனியல்ஸுக்கு வழங்கினார்.

ஆனால் இந்தச் செய்தி வெளியாகிவிட்டது.

ட்ரம்பின் தேர்தல் செலவுகள் பற்றிய கணக்கு வெளியான பொழுது இந்த 130,000 டாலருக்கான கணக்கு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அது தனது சொந்தச் செலவு என்று கோஹென் குறிப்பிட்டார்.

ஆனால் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணையின்போது அந்த பணத்தை டிரம்ப் தனக்கு வழங்கியதாக கோஹென் தெரிவித்தார்.

அதனை ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் பின்னர் ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு ரகசிய ஒப்பந்தம் தொடர்பான எல்லா தகவல்களும் வெளியானதால் அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் டேனியல் மனு செய்தார்.

ஒப்பந்தம் தொடர்பான எல்லா தகவல்களும் வெளியான காரணத்தினால் அந்த வழக்கு விசாரணைக்கு உரியதல்ல என்று நீதிபதி ராபர்ட் உத்தரவிட்டார்.

நான் எந்த தகவலையும் வெளியிடவில்லை, அதனால் நான் தொடர்ந்த வழக்குக்கான நீதிமன்ற கட்டணம், வழக்குரைஞர் கட்டணம் ஆகிய செலவுத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று டேனியல் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று நீதிபதி ராபர்ட். டேனியல் 44,100 டாலர் வழங்கும்படி டிரம்புக்கு உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறும்படி செய்தியாளர்கள் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரிடம் கேட்டனர் அவர் எந்த கருத்தும் இப்பொழுது தன்னிடம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.