October 2, 2022

குழந்தைகளுக்கெதிரான வன்முறை : இளைஞர்கள் ஒன்று கூடி தடுக்க த்ரிஷா அழைப்பு!

யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திர மான செல்வி .த்ரிஷா கிருஷ்ணன் , குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டு வர இளைஞர்கள் இது குறித்து பேசவும் , செயல்படவும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார் .

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கணக்குப்படி 2006-ல் ஆயிரங்களில் இருந்த குழந்தை கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை, 2016-ல் லட்சங்களைத் தாண்டிவிட்டது. பத்து ஆண்டுகளில் 500 சதவீத அளவுக்குக் குற்றங்கள் அதிகரித்திருப்பது நாம் என்ன மாதிரியான ‘பண்பட்ட நாகரிக’ சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை உணர்த்துகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கடத்தலுக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தை வகிப்பவை குழந்தைகள் மீதான பாலியல் குற்றங் களே. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் குடும்ப அமைப்புக்குத்தான் இருக்கிறது. ஆனால், குடும்ப உறுப்பினராலோ உறவினராலோ அல்லது நன்கு அறிமுகமான நபராலோ தான் பெரும்பாலான குழந்தைகள் வன்முறைக்கு ஆளாக்கப்படும் நிலையில் இது போன்ற வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல் குறித்து இளைஞர்கள் மத்தியில் த்ரிஷா பேசுகையில் , 2014 முதல் 2016 வரை போஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை எடுத்துரைத்தார் .

ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் இன்று  யுனிசெப் சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகள் குறித்து பேசியபோது….’தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி , 2014 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000 , 2015 இல் இது 15000 வழக்கு கள் , 2016 இல் 36000 வழக்குகளாக இரு மடங்காகிவிட்டது . குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள் , நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் செய்யப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார் .

இப்படியான பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 % பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள் ” இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது .சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர் ,சிறுமியர் ,பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்க தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள் அனைத்தை யும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சபதம் ஏற்கவும், செயல்படவும், இந்திய மக்கள் தொகையில் 40 % சதவிகிதமாக இருக்கும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் .குற்றவாளிகளை இவ்வகையான கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிக்க ஊக்குவிக்கும் பல ஆண்டு காலங் களாக இருந்து வரும் அமைதி காத்தல் எனும் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.

யுனிசெப் நிறுவனத்தின் தகவல்தொடர்பு வல்லுநர் சுகட்டா ராய் , திரிஷாவின் கருத்துகளை எதிரொலிப்பதாகவே பேசினார் . வளரும் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் குரல் அவர்களின் வாழ்வை பாதிக்கும் விஷயங்களில் உரக்கக் கேட்க வில்லை என்றார் .அவர்களுக்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க ஊக்கப் படுத்தப்படவில்லை .அது பெயரள விற்கானாலும் சரி ,முக்கியத்துவமானதாக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு எதிரான வன் முறையை ஒலிக்கும் இதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் பங்கேற்பதும் , பேசுவதும் ஒரு சமூகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கான சரியான தருணம் இதுவாகும் என கூறினார்.

முன்னதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் த்ரிஷா பேசும் போது, “எனக்கு அஜித் எவ்வளவு பிடிக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். நான் இன்னும் ’நேர்கொண்ட பார்வை’ படம் பார்க்க வில்லை. ஆனால் அவரைப் போன்ற ஒரு சூப்பர்ஸ்டார் இப்படியான படத்தில் நடித்ததற்குக் கண்டிப்பாகப் பெரிய பாராட்டுகள். படத்தின் செய்தி பலர் கண்களைத் திறந்துள்ளது. நான் இப்போது தான் சென்னைக்கு வந்தேன். கண்டிப்பாகப் படத்தைப் பார்ப்பேன். இப்படியான ஒரு முயற்சியை அவர் ஆதரித்ததற்கு அவரைப் பாராட்ட வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு கண்டிப்பாகத் தேவை. அவர்கள் தான் நாளைய அரசியல்வாதிகள். அரசியல் பற்றி நாம் இங்குப் பேச வேண்டாம். ஆனால் ஓட்டுப்போடுவது முக்கியம். உங்களுக்கு யார் மீதி நம்பிக்கை இருக்கிறதோ அவருக்கு ஓட்டுப் போடுங்கள். இந்தியாவில் பாலியல் வன்முறை களுக்குச் எதிராக கடுமையாக சட்டங்கள் மாற வேண்டும். அரபு நாடுகளில் தவறுகளுக்கு உடனடி தண்டனை தருவது போல நம் ஊரிலும் வர வேண்டும். அப்போதுதான் குற்றச்செயல்கள் குறையும்” என்று பேசினார் த்ரிஷா