தாய்லாந்த் திருநங்கைக்கு சர்வ தேச அழகிப் பட்டம் !

தாய்லாந்த் திருநங்கைக்கு சர்வ தேச அழகிப் பட்டம் !

உலக அளவில் மிக பிரபலமானதும் திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப் போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றுள்ளது. இதில் 24 வயதாகும் தாய்லாந்தின் ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் என்பவர் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார். இறுதிப் போட்டியில் பங்குபெற்ற மொத்தம் 27 திருநங்கை அழகிகளில் இருந்து தாய்லாந்தின் ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் வெற்றி பெற்றுள்ளார்.

tran mar 18

திருநங்கைகளை போற்றும் வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டிகள் நடத்த்ப்பட்டு வருகிறது. அது தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் திருநங்கைகளுக்கான மிஸ் சர்வதேச அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தாய்லாந்து 4 முறை வெற்றிவாகை சூடியுள்ளது. தொடர்ந்து பிலிப்பைன்ஸ் 2 முறையும், வெனிசுலா, பிரேசில், தென் கொரியா, ஜப்பான், மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் வென்று சாதித்துள்ளது.

குறித்த போட்டியில் பங்குபெறும் திருநங்கைகள் பிறக்கும்போது கண்டிப்பாக ஆணாக பிறக்க வேண்டும், ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம். இந்த ஆண்டின் அழகியாக வெற்றி பெற்றுள்ள ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். தற்போது மாடலாகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!