டொயோட்டாவின் மிராய் கின்னஸ் சாதனை!

டொயோட்டாவின் மிராய் கின்னஸ் சாதனை!

லகப் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் டொயோட்டா. நிறுவனத்தின் வாகனங்கள் பல்வேறு விஷயங்களுக்காக பிரபலமானவை. தற்போது ஒரே பயணத்தில் நீண்ட தூரம் பயணித்த சாதனையை செய்துள்ளது டொயோட்டாவின் மிராய் கார். இதன் மூலம் தற்போது அதன் கிரீடத்தில் மற்றுமொரு மயிலிறகு சூடப்பட்டுள்ளதாக்கும்.

உலகச் சாதனையை செய்யும் இரண்டு நாள் நிகழ்ச்சியானது ஆகஸ்ட் 23 அன்று கலிபோர்னியாவின் கார்டனாவில் உள்ள TTC (Toyota Technical Center) இல் தொடங்கப்பட்டது. ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவின் மிராய் கார் இந்த மாபெரும் சாதனையை படைத்துள்ளது. அதாவது டொயோட்டாவின் மிராய் கார் ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி, மிக நீண்ட தூரம் பயணித்த வாகனம் என்ற பிரிவில் கின்னஸ் உலக சாதனை செய்துள்ளது.

ஹைட்ரஜனால் இயங்கும் டொயோட்டாவின் மிராய் தெற்கு கலிபோர்னியாவில் மேற்கொண்ட இந்த சாதனை அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தப் பயணத்தின் ஒரே ஒரு முறை, ஐந்து நிமிடம் மட்டுமே எரிபொருள் நிரப்பப்பட்டு, மொத்தம் 1360 கிலோமீட்டர்களைக் கடந்து மிராய் சாதனை படைத்தது.

ஹைப்பர்மில்லர், வெய்ன் ஜெர்டெஸ் மற்றும் இணை பைலட் பாப் விங்கர் தலைமையில் கார் இவ்வளவு தூரத்தை கடந்துள்ளது. இந்த முழு பயணத்தையும் கின்னஸ் உலக சாதனைகள் குழுவும் கண்காணித்தது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்த கார், ஒரே ஐந்து நிமிட சார்ஜில் 1360 கிமீ தூரத்தை கடந்து அனைவரையும் திகைக்க வைத்தது. இந்த தூரத்தைக் கடக்க இரண்டு முழு நாட்கள் ஆனது என்ற தகவலை டொயோட்டா நிறுவனம், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!