December 9, 2022

டாப் கன் : மேவ்ரிக் – விமர்சனம்!

ஹாலிவுட் ஆக்டர் டாம் க்ரூஸ் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம் டாப் கன். இதில் டாம் குரூசுடன் கெல்லி மெக்கில்ஸ், வல் கிம்மர், அன்டோனி எட்வர்ஸ் நடித்திருந்தனர். டோனி ஸ்கார் இயக்கி இருந்தார். சூப்பர் ஆக்ஷன் படங்களுக்கு இப்போதும் எடுத்துக் காட்டாய் இருக்கிற படம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 36 ஆண்டுகளுக்கு பிறகு டாப் கன் மேவரிக் என்ற பெயரில் தயாராகி ஒரு வழியாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. டாம் குரூசுடன் மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கொனோலி, ஜான் ஹம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

எப்போதோ முழுசாக த்யாரான நிலையில் கோவிட் காலகட்டம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே வந்தது. என்றாலும், திரையரங்குகள் நிறையும் அளவிற்கு என்று மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்களோ அதுவரைக் காத்திருப்பேன் என டாம் குரூஸ் பிடிவாதமாக இத்தனை நாட்கள் ரிலீஸ் தேதியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த சுமார் 170 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் உருவாகியுள்ள படமிது.

கதை என்னவென்றால் புதிய ப்ளேன் ஒன்றை அநாசியமாக ஓட்டியபடி அரிமுகமாகும் டாம், அந்த ப்ளேனுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் லிமிட்டை தாண்டி அதனை இயக்கி விடுகிறார். இதனால் அந்தரந்திலேயே அந்த ப்ளேன் வெடித்து சிதற, அதற்கு தண்டனையாக அவர் டாப்கன் எனப்படும் போர் விமானிகளை இயக்கும் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்படுகிறார். அங்கு அவருக்கு அபாயகரமான இலக்கு ஒன்று கொடுக்கப்படுகிறது. அதனை செய்து முடிக்க, அவருக்கு பயிற்சி பள்ளியில் இருக்கும் பெஸ்ட் பைலட்கள் கொடுக்கப்படுகிறார்கள். அதில் இறந்துபோன தனது நண்பனின் மகனும் இருக்கிறான். இந்த பைலட்களை வைத்து டாம் அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்கை செய்து முடித்தாரா இல்லையா என்பதே டாப் கன்

டாம் க்ரூஸ் படம் என்றாலே அதிரடியான ஆக்ஷன் நிச்சயம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தில் இப்படத்தில் அண்ணாந்து பார்க்க வைக்கும் விதத்தில் – அதாவது வானில் போர் விமானங்களின் சாகசங்களை இடம் பெறச் செய்து வாயை பிளக்க வைக்கிறார்கள். இப்படத்திற்காக போர் விமானங்களை ஓட்டவும், கேமராக்களை வைத்து படமெடுக்கவும் டாம் க்ரூஸ் உள்ளிட்ட நடிகர்கள் சில மாதங்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். அதற்குப் பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கிறது.

36 ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்போது எப்படி ஆக்ஷன்களில் அசத்தினாரோ அதே போலவே இப்போதும் ப்ளேனை வைத்து டாம் அந்தரத்தில் செய்யும் சாகசங்களாகட்டும், கவாஸ்கி பைக்கை முறுக்கி ஸ்பீடு ஏற்றும் காட்சிகளாட்டும், நண்பன் தன்னால் இறந்துவிட்டானே என்ற குற்ற உணர்ச்சியுடன் அவர் காட்டும் கன்ட்ரோல் எமோஷனாகட்டும், இனி ஒன்றுமே செய்ய முடியாது என்ற கட்டத்தில்.. கண்ணா 5 கிரகங்களிலும் உச்சம் பெற்ற டாம்.. எதையும் செய்வான் என நிரூபிக்கும் காட்சிகளாட்டும் எல்லாவற்றிலும் டாமுக்கே உரித்தான முத்திரையை அப்ளாஸ் அள்ளுகிறார்

டாம் நண்பனின் மகனாக மைல்ஸ் டெல்லர், மைல்ஸை சீண்டிப் பார்க்கும் சக விமானியாக கிளென் போவெல், அட்மிரலாக ஜான் ஹாம் ஆகியோரும் இப்படத்தில் குறிப்பிட வேண்டியவர்கள். முதல் பாகத்தில் நடித்த வால் கில்மர் இப்படத்தில் அட்மிரல் ஆக ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்.

ஆனாலும் இந்த ஆக்ஷன் கதைக்குள் நட்பு,காதல், துரோகம், குரோதம், சென்டிமென்ட் என்று அத்தனை உணர்ச்சிகளையும் கலந்து ஒரு முழு பக்கா பிரியாணியை நமக்கு வழங்கி இருக்கிறார் டைரக்டர் ஜோசப் கோசின்ஸ்கி. அவரின் எண்ண ஓட்டத்துக்காகவும், ஹீரோ டாம் க்ரூஸூன் டெடிகேஷனுக்காகவுமே இப்படத்தை தியேட்டரில் போய் பார்த்தே ஆக வேண்டும்

மொத்தத்தில் டாப் கன் மேவ்ரிக் – டாம் க்ரூஸ் அழகுக்கும், ஸ்டைலுக்காக இல்லாவிட்டாலும் வான வித்தைக்காக பார்க்கலாம்

மார்க் 3.5/5