October 18, 2021

இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களுக்கான பட்டியல்!

இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களுக்கான பட்டியலில் புனே முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 14வது இடம் பிடித்துள்ளது என்பதுடன் தமிழகத்தில் எந்த நகரமும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் தேசியளவில் ஆய்வு மேற்கொண்டது. பொருளாதாரம், சமூகம், உள்கட்டமைப்பு, ஆளுமை உள்ளிட்ட நான்கு காரணிகளை அளவுகோலாகக் கொண்டு இந்தியா முழுவதும் சுமார் 111 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்ப ட்டுள்ளது. இதன் முடிவில் இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களுக்கான பட்டியலில் மஹா ராஷ்டிராவின் புனே நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் நவி மும்பை மற்றும் கிரேட்டர் மும்பை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நான்காவதாக ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி, 5வது இடத்தில் ஹரியானாவின் சண்டிகர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதிகளவில் நகரங்களை கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் எந்த நகரமும் பட்டியலில் முதன்மையான 10 இடங்களுள் வரவில்லை.

அதே சமயம் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் திருச்சி 12வது இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 14-வது இடமே கிடைத்துள்ளது.

வாழத் தகுதியான நகரங்களுக்கான பட்டியலில் 6வது இடத்தில் மஹாராஷ்டிராவின் தானா, 7வது இடத்தில் சட்டீஸ்கரின் ராய்பூர், 8வது இடத்தை மத்திய பிரதேசத்தின் இந்தோர், 9வது இடத்தில் ஆந்திராவின் விஜயவாடா, 10வது இடத்தில் ம.பி-யின் போபால் ஆகிய நகரங்கள் இடம் பெற்று  உள்ளன. தலைநகரான டெல்லி மக்கள் வாழ்வதற்கு உகந்த பட்டியலில் 65-வது இடம் பிடித்துள் ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, காற்று மாசுபாடு, வாகன நெரிசல் உள்ளிட்ட காரணங்க ளால் டெல்லி வாழ்வதற்கு உகந்ததாக இல்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.