தமிழ்நாட்டில் உள்ள 14 டோல்கேட் ரேட் அதிகரிப்பு!

டிமானிட்டேசன்,  பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் தமிழகத்தில் உள்ள 14 சுங்க சாவடி களில் இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது பல தரப்பிலும் இயலாமையுடன் கூடிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்ததில் 40 இடங்களில் வாகனங்களுக்கான கட்டணம் வசூலிக்கும் சுங்க சாவடிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட 26 சுங்க சாவடிகளில் கடந்த மாதம் முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது.2008 ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட 14 சாவடிகளில் மட்டும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அவற்றிலும் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதில் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி சுங்கச்சாவடியில் இலகு ரக வணிக வாகனங்களுக்கான கட்டண தொகையான 140 ரூபாயில் 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டு,145 ரூபாயாக தற்போது வசூலிக்கப்பட்டுவருகிறது. அதேபோல தனியார் பேருந்துகளுக்கான கட்டணமாக இருந்த 280 ரூபாயில் 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக தற்போது வசூலிக்கப்பட்டுவருகிறது.

கார்கள் மற்றும் ஜீப்புகளுக்கு பழைய கட்டணங்களே வசூலிக்கப்பட்டுவருவதாக விக்கிரவாண்டி சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் இருக்கும் சுங்கச்சாவடி மற்றும் சேலம் அருகே உள்ள வைகுண்டம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. லாரி மற்றும் டிரக், பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல பழைய கட்டணம் 170 ரூபாயாக இருந்தது.

தற்போது 10 ரூபாய் கட்டணம் உயர்ந்து 180 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. லாரி மற்றும் டிரக், பேருந்துகளுக்கு ஒரு நாளைக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வர பழைய. கட்டணம் ரூபாய் 255 ஆகும் .தற்போது 10 ரூபாய் கட்டணம் உயர்ந்து ரூபாய் 265 வசூலிக்கப்படுகிறது.

இதுபோல பல வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூபாய் 265 பழைய கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் தற்போது 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 285 வசூலிக்கப்படுகிறது. பல அச்சு வாகனங்கள் ஒரு நாளைக்கு பலமுறை வந்து செல்ல பழைய கட்டணம் ரூபாய் 410 ஆகும் .

தற்போது 20 ரூபாய் கட்டணம் உயர்ந்து ரூபாய் 430 வசூலிக்கப்படுகிறது. கார் மற்றும் ஜீப் , வேன் களுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த கட்டண உயர்வு 31.8.2020 ஆம் ஆண்டு வரை அமுலில் இருக்கும் என சுங்கச்சாவடிகளில் எளிதில் ஒட்டப்பட்டிருக்கிறது.