உலக ப‌க்கவாத ‌தினம்!

உலக ப‌க்கவாத ‌தினம்!

க்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக்-கால் சர்வதேச அளவில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி பேர் பாதிப்படைகிறார்கள். அதில், இந்தியாவில் மட்டுமே ஆறு கோடி பேர் என்று எச்சரிக்கை செய்கிறது மருத்துவத்துறை. பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ஆண்டுதோறும் அக்டோபர் 29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது மனிதனின் உடல் இயக்கத்தையும் மன இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறுப்பு பாதிக்கப்படும்போது உடல் இயக்கத்திலும், பேசும் தன்மையிலும், சிந்தனையாற்றல் செயலிழப்பு அல்லது செயல்படும் தன்மையில் மாறுபாடு ஏற்படுகிறது. விபத்து, காயம், மூளை ரத்தக்குழாயில் ஏற்படும் தாக்கம் காரணமாக மூளை பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது, மூளை ரத்தக்குழாய் தெறித்து ஏற்படும் ரத்தக்கசிவே ‘ஸ்டிரோக்‘ என்கிற பக்கவாதம்.

பக்கவாதம் யாரை தாக்குகிறது?

பக்கவாதம் என்பது நரம்பு சம்மந்தமான நோய். இந்நோயில் இரண்டு பிரிவுகள் உள்ளன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு வருவது, மற்றொன்று பெரியவர்களுக்கு வருவது. இதில், பெரும்பாலும் முதியவர்களையே பக்கவாதம் தாக்குகிறது. உயர் ரத்த அழுத்தம், உடம்பில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பது, ரத்த குழாயில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் முதியவர்களுக்கு வருகிறது. அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்கும் சில காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாதம் வருதவற்கான காரணங்கள்!

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நரம்புகளுக்கு பத்து நிமிடம் சரியாக செல்லவில்லை என்றாலே உடம்பு செயலிழக்க ஆரம்பித்துவிடும். உடலில் இருக்கும் மற்றப் பாகங்களைவிட மூளையில் இருக்கும் ரத்தக்குழாய் மிகவும் மெலியதாக இருக்கும். இந்த ரத்தக்குழாய் ரத்த ஓட்டம் அதிகமாகி வெடிப்பதாலும் பக்கவாதம் வரலாம். ரத்தம் வேகமாக போவதும் அல்லது போகாமல் ரத்தம் பொறுமையாக செல்வதும் மூளைக்கு ஆபத்துதான். பொதுவாக, நடுத்தர வயதுடையவர்களுக்கு 120 அளவில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டும். அதுவே, 50 வயதுக்குமேல் இருப்பவர்களுக்கு 130 கூட இருக்கலாம். அதற்குமேல், இருப்பதுதான் உயர் ரத்த அழுத்தம். அப்போதுதான், ரத்தக்குழாய் வெடித்து பக்கவாதம் வந்துவிடுகிறது. அதேபோல், உடம்பில் கொழுப்பு அதிகமாக இருந்தாலும் ரத்தம் உறைந்து நரம்பு பாதித்து பக்கவாதம் வந்துவிடும்.

பக்கவாத நோய்க்கான அறிகுறிகள்!

மூளைதான் நம் உடம்பை செயல்பட வைப்பது. மூளை நரம்பு பாதிப்பதால் நம் கை,கால்கள் பாதிப்படைகின்றன. திடீரென்று அதிக தலைவலி, மயக்கம் வருவது, திடீரென்று கண் பார்வையை கருப்பாக மறைப்பது, மரத்துப்போதல், உணர்வற்றத் தன்மை போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகள். இதனால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அதேபோல, கை,கால்கள் பொறுமையாக செயல்படுகிறது என்றாலும் உடனடியாக ஸ்கேன் எடுத்துவிட வேண்டும். அப்போதுதான், ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? வெடித்துள்ளதா? என்பது தெரியும்.

பக்கவாதம் என்பதே ஒரு பக்க அசைவுகள்தான். நம் மூளையின் வலது பக்க மூளையில் பாதிப்பு என்றால், இடது பக்க கை கால்கள் செயல்படாது அல்லது பொறுமையாக செயல்படும். அதேபோல்தான், இடது பக்க மூளையில் பாதிப்பு என்றால் வலது பக்க கை கால்களில் பாதிப்பு தெரியும். அப்படி பக்கவாதம் வந்தாலே மற்றொருவரை சார்ந்துதான் வாழமுடியும். அதனால், பாதிப்பு ஏற்பட்டவுடன், மருத்துவர்களிடம் அதற்கான சிகிச்சையையும் மருந்துகளையும் மேற்கொண்டால் விரைவில் குணமாகலாம். அதேபோல பிசியோதெரபியும் தொடர்ந்து கொடுக்கவேண்டும்.

error: Content is protected !!