November 27, 2022

உலக புற்று நோய் தினமின்று!.

செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.உலகம் முழுவதும் புற்றுநோயால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை உயிரை இழக்கின்றனர். இன்றைய சூழ்நிலயில் 4 கோடியே 26 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறாரகள்.இதைக் கவனத்தில் கொண்டே சர்வதேச ரீதியில் உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04 ஆம் த்ர்ர்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இத்தினத்தின் எதிர்பார்ப்பாகும். இத்தினத்தை உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பு (Union for International Cancer Control, UIIC) முன்னின்று நடத்துகிறது. இந்த புற்று நோய் தினம் 1933ஆம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக (WICC) ஏற்படுத்தப்பட்டது.

கட்டுப்பாடற்று செல்கள் பெருகுவதே புற்று நோய்

புற்றுநோய் என்பது (Cancer) கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி ஏனெய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும், எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

மரபிகளில் ஏற்படும் மாற்றங்கள்

புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை சுருக்கமாக பார்க்க வேண்டு கலங்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகைப்பழக்கம்…

புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று, சில வேளைகளில் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

அறிகுறிகள்

புற்று நோய் தொடர்பான அறிகுறிகளில் சில- உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு, நோயின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் மாற்றமடையலாம். மரணத்தைத் தள்ளிப் போடலாம் புற்றுநோய் தவிர்க்கப்பட முடியாத போதிலும் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும். ஆகையினால், புற்றுநோய்க்கு ஆளான ஒருவர் இனிமேல் தன்னால் எதுவுமே செய்ய இயலாது என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.

விழிப்புணர்வு அவசியம்

சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவே யுள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை, போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விஷயங்களின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.

நவீன சிகிச்சை முறைகள்

இந்நோய்க்கு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் உலகமெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதனால் நோயாளிகளை முன்னரை விடவும் அதிகமாகவே குணப்படுத்த முடியுமெனவும் டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மீண்டும் பழைய தோற்றத்தைப் பெறலாம் . இதற்கான சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய உருவ மாற்றம், தலைமயிர் கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகிய அனைத்தும் தற்காலிகமானவையேயாகும். குறுகிய காலத்தில் அவர் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும். ஆகையினால் சமூகத்திற்கு வெட்கப்பட அல்லது அஞ்சியோ சிகிச்சைகள் ஆரம்பிப்பதனை காலம் தாழ்த்தவோ அல்லது தவிர்ப்பதோ பிழையான கொள்கையெனவும் புற்றுநோய் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முழுமையான உடற்பரிசோதனை

பெரும்பாலும் க்ம்ப்ளீட் பாடி செக்கப் எனப்படும் முழுமையான உடல் மருத்துவ பரிசோதனைக்கு செய்து கொள்ள வேண்டும் குறிப்பாக் 30 வயசுக்கு இது கட்டாயம். இதன் மூலம் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை அறிந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.புற்றுநோய் என்பதை ஒரு மரண தண்டனையாக சிலர் என நினைக்கின்றார்கள். ஆனால் புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள். புற்றுநோயை சிலர் என் விதி என நினைக்கின்றார்கள். ஆனால் நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும் என்பது தான் உண்மை. எனவே இவற்றை கருத்தில் கொண்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடுவோம். நமது சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதை வாழ்நாள் பழக்கமாக கொள்வோம்..

புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால் செய்ய வேண்டிய செயல்கள்!!!

எடையைக் கட்டுப்படுத்துதல்

அளவுக்கு அதிகமான எடையை கொண்டிருப்பதை யாரும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதில்லை. இது உங்களை தொந்தரவு செய்வதுடன், கட்டுப்படுத்த இயலாதவராகவும் வைத்துள்ளது. உங்களுடைய எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, ஆரோக்கியமான எடையை பராமரித்து வந்தால், புற்றுநோயால் தாக்கப்படும் அபாயத்தை பெருமளவு தவிர்க்க முடியும்.

ஆல்கஹால்

குடி குடியைக் கெடுக்கும். உடல் நலத்திற்கும் உலை வைக்கும். மதுப்பழக்கம் புற்றுநோய் வருவதற்கும் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. எனவே, மதுவை பெருமளவு விலக்குவது புற்றுநோய் ஆபத்திலிருந்து உங்களையும் விலக்கி வைக்கும்.

உப்பு

சாப்பிடும் உணவில் உப்பின் அளவை கட்டுப்படுத்தி வைப்பதன் மூலம் புற்றுநோயையும் கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவில் உள்ள உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், வயிற்று புற்றுநோயையும் வர வைக்கும்.

கதிர்வீச்சு

புற்றுநோயை உருவாக்கும் காரணங்களில் ஒன்றாக கதிர்வீச்சு உள்ளது. தினமும் பல்வேறு காரணங்களுக்காக நாம் கதிர்வீச்சுகளால் தாக்கப்படுகிறோம், இதில் முதன்மையானது சூரியனிடம் இருந்து வரும் புறஊதாக் கதிர்களாகும். எனவே, தேவையற்ற வகையில் கதிர்வீச்சுகளை எதிர் கொள்வதையும், இயற்கைக்கு மாறான முறைகளில் கதிர்வீச்சுகளை எதிர் கொள்வதையும் தவிர்க்கவும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

உப்பிட்ட பன்றியின் தொடை, பன்றி இறைச்சி, சாசேஜ்கள் மற்றும் வெள்ளை பூண்டு மணம் கொண்ட இத்தாலிய உணவு வகைகள் ஆகியவை புற்றுநோய் காரணங்களை குறைக்கும் திறன் கொண்டவையாகும். இது புற்றுநோயை தடுக்கும் காரணங்களில் ஒன்றாகும்.

பணி நிலை

புற்றுநோய்க்கு முதன்மை காரணமாக இருக்கும் பணியிடங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை நாம் குறைவாக மதிப்பிடக் கூடாது. பணியிடங்களில் இருக்கும் பல்வேறு விதமான இரசாயனங்கள் காரணமாகவும் புற்றுநோய் தூண்டப்படும்.

புகையிலை

புற்றுநோயை வர வைக்கும் குணம் கொண்ட புகையிலையை சாப்பிடுவது உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. புகை பிடிப்பவாகள் அவற்றை உள்ளிழுப்பதை குறைக்க வேண்டும் மற்றும் பிற வடிவங்களில் புகையிலையை மெல்லுபவர்களும் அவற்றை குறைக்க வேண்டும். இதன் மூலமே புற்றுநோயை குறைக்க முடியும்.

நார்ச்சத்துக்கள்

நம்முடைய உணவு முறையை நாகரீகமாக மாற்றியுள்ளதும் புற்றுநோயை வரவழைக்கும் காரணங்களில் ஒன்றாக உள்ளது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் செரிமாண உறுப்புகள் பாதிக்கப்படும். எனினும், நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த அபாயங்களை குறைக்க முடியும்.

புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும் இந்திய மசாலா பொருட்கள்!!!

அனைத்து போர்களுக்கும் வன்முறை என்பது கட்டாயம் கிடையாது. அதே போல் ஒவ்வொரு சண்டையிலும் இரத்தம் சிந்த வேண்டும் என்றும் அவசியமில்லை. உங்களுடைய எதிராளி புற்றுநோய் போன்ற ஒரு பிடிவாதமான நோயானால், உங்கள் படைக்கலக் கொட்டில் என்ன இருக்க வேண்டும் என்று தெரியுமா? சீரான உடல்நல சோதனை மற்றும் புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்யும் உணவுகளை உண்ணுவதே ஆகும். நடிகை லிசா ரேவிற்கு எலும்பு ஊனில் ஏற்படும் அறிய வகை புற்றுநோயான மல்டிபிள் மைலோமா இருப்பது கண்டறியப்பட்ட போது அவர் சொன்னதெல்லாம் “நான் புற்றுநோயை வீழ்த்துவேன்” என்பது தான். இந்த நேர்மறையான எண்ணம் இருப்பது அவசியம் தான். ஆனால் அது மட்டும் போதுமா என்ன? அதோடு சேர்த்து சில உணவு முறைகளையும் பின்பற்றினால், புற்றுநோயை எதிர்த்து போராடலாம். முக்கியமாக சில மசாலா பொருட்கள், நம் உடலில் பரவி சமாளிக்க இயலாத புற்று அணுக்களாக மாற்றுவதை தடுக்கும்.

உதாரணமாக, கீழே விழுந்து முட்டியில் அல்லது முழங்கையில் அடிபட்டால், அடிபட்ட இடத்தில் நொடிப் பொழுதில் தயார் செய்த குங்குமப்பூ கலந்த வெதுவெதுப்பான பாலை காயத்தின் மீது தூவுவார்கள். அதே போல் மஞ்சள் தடவினாலும் சரி, வெட்டு காயங்களும் தோல் சிராய்ப்புகளும் விரைவாக ஆறும். ஆனால் இன்று எத்தனை பேர் இதையெல்லாம் பின்பற்றுகின்றனர்? மஞ்சள் மற்றும் குங்குமப்பூ போன்ற மசாலா பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அவைகளை சிறு வயதிலிருந்தே உணவில் சேர்க்க ஆரம்பித்தால், உடல் திடமாக மாறி, நச்சுத்தன்மை, பாக்டீரியா மற்றும் தொற்றுகளில் இருந்து காக்கும். இப்போது கொடிய நோயான புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சில மசாலா பொருட்களையும் மற்றும் சில உணவு முறைகளைப் பற்றியும் பார்ப்போம்.

மஞ்சள்

புற்றுநோய் எதிர்ப்பு குணங்களை மஞ்சள் கொண்டுள்ளதால், அதனை மசாலாப் பொருட்களின் அரசனாக பார்க்கப்படுகிறது. இது போக நம் உணவிற்கு நிறத்தை சேர்க்கவும் இது பயன்படுகிறது. மஞ்சளில் சக்தி வாய்ந்த பாலிஃபீனால் குர்குமின் உள்ளது. இது முன்னிற்குஞ்சுரப்பி புற்று நோய், மெலனோமா, மார்பக புற்றுநோய், மூளை கட்டி, கணையம் புற்றுநோய், வெள்ளையணுப் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்களை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குர்குமின் என்னும் பொருள் அணு தற்கொலையை மேம்படுத்தும். அதனால் இது மற்ற ஆரோக்கியமான அணுக்களை எந்த விதத்திலும் பாதிக்காமல், புற்றுநோய் அணுக்கள் பரவுவதை தடுக்கும். ஆனால் பொதுவாக அளிக்கப்படும் புற்றுநோய் சிகிச்சைகளான கதிர்வீச்சு மற்றும் ஹீமோ தெரப்பியால் புற்றுநோய் அணுக்களுக்கு அருகில் இருக்கும் ஆரோக்கியமான அணுக்களும் பாதிக்கப்படும். இதன் பக்க விளைவுகள் உடனுக்குடன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெருஞ்சீரகம்/சோம்பு

பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளது. அதனால் புற்று அணுக்கள் சரணாகதி அடைய வேண்டியதை தவிர வேறு வழியில்லை. பெருஞ்சீரகத்தில் உள்ள மூலக்கூறான ‘அனித்தோல்’, புற்று அணுக்களின் துளைத்தல் மற்றும் ஒட்டிக் கொள்கிற செயல்களை தடுத்து நிறுத்தும். மேலும் புற்று அணுக்கள் பெருகுவதற்கு, அதன் பின்புலத்தில் நடக்கும் செயல்களை எல்லாம் அடக்கும். பெருஞ்சீரகம் மற்றும் பூண்டு கலந்த தக்காளி சூப் அல்லது பெருஞ்சீரகம் கலந்த நற்பதமான சாலட்களை உணவு உண்ணுவதற்கு முன் எடுத்துக் கொள்ளலாம். வறுத்த பெருஞ்சீரகத்தை சீஸ் உடன் கலந்தும் உண்ணலாம்.

குங்குமப்பூ

குங்குமப்பூவில் க்ரோசெட்டின் என்ற இயற்கை கரோட்டினாய்டு டைகார்போக்ஸில் அமிலம் உள்ளது. இது புற்றுநோய்க்கு எதிராக போராடும் முதன்மையான பொருளாகும். இது நோயின் வளர்ச்சியை மட்டும் தடுக்காமல், கட்டியின் அளவையும் பாதியாக குறைத்துவிடும். அதனால் புற்றுநோய்க்கு நிரந்தரமாக குட்-பை சொல்லலாம். இதனை தயார் செய்ய 2,50,000 சாப்ரன் க்ரோசஸ் பூக்களின் சூல்முடிகள் தேவைப்படும். இவ்வளவு சூல்முடிகள் சேர்த்தாலும் கூட, அது வெறும் அரை கிலோவை தாண்டாது. அதனால் உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த மசாலா பொருளாக இருந்தாலும் கூட, இதன் மருத்துவ குணங்களுக்காக இதனை விலை கொடுத்து வாங்குவது தவறில்லை.

சீரகம்

ஆம், செரிமானத்திற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது சீரகம். அதனால் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு கை சீரகத்தை மெல்ல விரும்புவோம். இருப்பினும், அதில் அதையும் தாண்டி பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ள சீரகத்தில் தைமோக்வினோன் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு காரணமான அணுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும். அதனால் எண்ணெய் மற்றும் கலோரிகள் அதிகமுள்ள நொறுக்குத் தீனிகளை உண்ணுவதற்கு பதில் சீரகம் சேர்த்த ரொட்டி, பீன்ஸ் அல்லது சாஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். சுவைமிக்க ஆரோக்கியமான இந்த உணவுகளை உண்ணுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம். சாதத்தில் பருப்பு ஊற்றி உண்ணுவதால், பருப்பில் கூட சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

லவங்கப்பட்டை

தினமும் அரை ஸ்பூன் லவங்கப்பட்டை பவுடரை எடுத்துக் கொண்டால் போதும், புற்றுநோய் இடர்பாட்டில் இருந்து தப்பிக்கலாம். இயற்கை உணவு பதப்பொருளாக விளங்கும் இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. கட்டி வளர்ச்சியை குறைக்க உதவும் லவங்கப்பட்டை, நம் உடலில் புதிய குழாய்கள் உருவாகாமல் தடுக்கும். அதிலும் லவங்கப்பட்டையை உணவில் கீழ்கூறிய படி பயன்படுத்தலாம்:

– காலைப் பொழுதை லவங்கப்பட்டை கலந்த தேனீருடன் தொடங்குங்கள்.
– காலை உணவை ஆரோக்கியமானதாக அமைத்துக் கொள்ளுங்கள். அதற்கு இந்த மசாலாவை ஓட்ஸில் கலந்து குடியுங்கள்.
– பழங்களின் கலவையிலும் பயன்படுத்தலாம். நறுக்கிய ஆப்பிள், கொஞ்சம் வால்நட் மற்றும் சிறிதளவு லவங்கப்பட்டை பொடியை கலந்து உண்ணலாம்.
– இரவு படுக்க போகும் முன்பு ஒரு கப் பாலில் தேன் மற்றும் லவங்கப்பட்டையை கலந்து பருகினால், புற்றுநோய் உங்களை அண்டாது.

கற்பூரவள்ளி

பிட்சா அல்லது பாஸ்தாவை விட அதன் மேல் தூவும் கற்பூரவள்ளி மிகவும் ஆரோக்கியமானதாகும், முக்கியமாக முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். கிருமிநாசினி சேர்க்கை கூட்டுகளை இது கொண்டுள்ளதால், ஒரு டீஸ்பூன் கற்பூரவள்ளி இரண்டு கப் திராட்சைக்கு சமமாகும். க்யூயர்சிடின் என்ற பைட்டோ இரசாயனம் இதில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் புற்று அணுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். அதனால் புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக செயல்படும்.

குடைமிளகாய்

புற்றுநோய்க்கு எதிரான குணங்களை கொண்டுள்ள மசாலாவாக விளங்குகிறது குடைமிளகாய். ஆனால் அதனை அதிகமாக உட்கொள்ள கூடாது. இது அபோப்டோசிஸ் செயல்முறையை தூண்டுவதால் புற்று அணுக்களை அழித்து, மூளையில் உள்ள கட்டியின் அளவை குறைக்கும். மேலும் இது புற்றுநோயை அழிக்கவும் பெரிதளவில் உதவி புரியும்.

இஞ்சி

இந்த எளிமையான மசாலாவில் உள்ள பல மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க, மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க மற்றும் புற்று அணுக்களை அழிக்க உதவும். இதனை சமைக்கும் போது காய்கறிகள், மீன்கள் மற்றும் சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையையும் அதிகரிக்கும். இதன் சுவை பிடிக்கவில்லை என்றால் வேர்க்கோசுவுடன் சேர்த்து அதனை மெல்லுங்கள்.

இதர பொருட்கள்

கிராம்பு, சோம்பு, துளசி, பூண்டு, சீமைச்சோம்பு, வெந்தயம், கடுகு, புதினா இலைகள், ரோஸ்மேரி இலை, நற்பதமான எலுமிச்சை, வெர்ஜின் ஆலிவ் மற்றும் அவகேடோ என்னும் வெண்ணெய் பழம் ஆகியவைகளும் புற்று அணுக்களுக்கு எதிராக போராடும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானியங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவைகள் புற்று அணுக்களுக்கு எதிராக போராடுவதால் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து தேவை

தினமும் வெள்ளை நிற சாதத்திற்கு பதிலாக பழுப்பு நிற அரிசியை உண்ணுங்கள்.

கோதுமை பிரட்
வெள்ளை நிற பிரட்டிற்கு பதிலாக முழு தானிய பிரட்டை உண்ணுங்கள்.
ஸ்நாக்ஸ்
ஸ்நாக்ஸ் நேரத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் உண்ணுவதற்கு பதிலாக பாப்கார்ன் உண்ணுங்கள்.
மீன்கள்
ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இது அழற்சிக்கு எதிராக போராடும். எனவே மீன், மீன் மாத்திரை போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.

ஆலிவ் ஆயில்

சாதாரண சமையல் எண்ணெய்க்கு பதில், ஆலிவ் எண்ணெய்யை கொண்டு சமையுங்கள். இதனால் புற்றுநோய் வருவது குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

எப்போதும் பதப்படுத்தப்பட்ட அல்லது அடைக்கப்பட்ட உணவுகளையும் காய்ந்த உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.
குறிப்பு

புற்று நோயாளிகள் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல், மஞ்சள் கலந்த உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.

ரெங்கராஜன்