டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடக்கப் போகுதுங்கோ! – முழு விபரம்!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடக்கப் போகுதுங்கோ! – முழு விபரம்!

மிழக அரசில் 7,382 காலி பணியிடங்களுக்குக்கான குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறுகிறது. 7,382 காலி பணியிடங்களில் 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் தமிழில் 150 மதிப்பெண்ணில் குறைந்தது 60 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 7,301 காலி பணியிடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. நாளை முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

மொத்தம் 7,382 காலி பணியிடங்கள் ஆகும். இதில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படவுள்ளது. 274 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும் இந்த 7,382 காலி பணியிடங்களில் அடக்கம். காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மொழியில் 100 கேள்விகள், பொது அறிவில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 150 + 150 என 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!