உதவி ஜெயிலர் வேலை செய்ய தயாரா?
தமிழக அரசின் காலிப் பணியிடங் களை நிரப்பும் பணியை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் செய்கிறது. தற்போது உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
காலியிடங்கள்: உதவி ஜெயிலர் ஆண்கள் பிரிவில் 16 இடங்களும், உதவி ஜெயிலர் பெண்கள் பிரிவில் 14 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஆண்கள் 168 செ.மீ., உயரமும், பெண்கள் 159 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும்.
வயது: பொதுப்பிரிவினர் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் குறைந்தது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 150.
கடைசி நாள்: 2018 நவ., 7.
விபரங்களுக்கு: www.tnpsc.gov.in/notifications/2018_24_nofyn_assistant_Jailor%20pdf.pdf