டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு & குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையும் ரிலீஸ்!

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு & குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையும் ரிலீஸ்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை அடுத்து அந்த ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு வரும் மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது என ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது நினைவிருக்கும். இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அந்த இணையதளத்தில் தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in ஆகிய இரண்டு இணையதளங்களில் வெளியாகி உள்ள ஹால்டிக்கெட்டுக்களை டவுன்லோட் செய்து கொண்டு தேர்வு நாளின்போது கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்தவர்கள் மேற்கண்ட இரண்டு இணையதளங்களில் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குரூப் 2 பணிக்கு 116 பணியிடங்களுக்கும்  மற்றும் குரூப் 2ஏ பணிக்கு 5412 பணியிடக்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணயம் சார்பில் கடந்த 18ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குரூப் 2 பிரிவில் இந்த முறை காவல்துறை பிரிவின் கீழ் சிறப்பு பிரிவு அதிகாரிக்கான பதவி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தாததால் இந்த முறை வயது வரம்பை 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 23-02-2022 முதல் 23-03-2022 வரை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கான முதல் நிலை தேர்வு மே 21 தேதி நடத்தப்படும் என தேர்வாணயம் தெரிவித்துள்ளது.
error: Content is protected !!