December 4, 2021

டிஎன்பிஎஸ்சி தேர்வு தற்போது நடத்த வாய்ப்பு இல்லை: செயலாளர் தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டள்ளது. இதன் காரணமாக பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப் பட்டும், கல்லூரி தேர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட வருகின்றன.

அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்தி, காலியாக இருக்கும் அரசு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. ஆனால், குரூப் தேர்வுக்கு தயாராகி வந்தவர்களுக்கு, இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படுமா.? என்பது சந்தேகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், இப்போதைக்கு குரூப் தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், “தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். தேர்வுக்கு முன்பாக 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். சரியான சூழல் திரும்பிய பிறகு தேர்வு நிச்சயம் நடத்தப்படும். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.