இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்!

இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணபிக்க தொடங்கலாம்!

பொறியியல் எனப்படும் இன்ஜினியரிங் படிப்புக்கு இன்று மாலை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறுகையில், தமிழகத்தில் இன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், கலந்தாய்வுக்கு குறித்து வருகிற 15ஆம் தேதியான இன்று அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்கவேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org மாணவர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யலாம்.

தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன , மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப் படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கான சேர்க்கைகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். கல்லூரிகள் திறப்பது அல்லது வகுப்புகள் தொடக்கம் தொடர்பாக முதல்வர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!