பொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்!

பொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்!

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு கல்வி நிறுவனங்களை திறக்கும் முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் நவ.,1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, அக்.,31ம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து வகுப்புகள் தொடங்கலாம் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச்சில் முதல் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் ஏற்கனவே பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. இதுவரையில், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனடிப்படையில் ரேண்டம் எண்ணும் வெளியிடப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877- இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். அதில், சஸ்மிதா என்ற மாணவி முதலிடம் பிடித்தார்.
நவநீத கிருஷ்ணன் என்ற மாணவர் 2-வது இடத்தையும், காவ்யா என்ற மாணவி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும், அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வும்,
அக்., 8ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொதுக்கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். http://tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கட்-ஆப் மதிப்பெண்கள் அறியலாம்.

Related Posts

error: Content is protected !!