April 2, 2023

இந்த தமிழக ரியல் எஸ்டேட் வளர்ந்தெப்படி- கொஞ்சம் அலசல்!

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் அப்பா மட்டுமே சம்பாதிப்பார் அன்று. சொந்த வீடு வைத்திருந்தவர் கள் பிசினஸ் செய்தவர்கள் மட்டுமே. எங்கள் சொந்த ஊரில் மளிகை செட்டியார்கள், வாணிய செட்டியார்கள், வியாபார முதலியார்கள் மட்டுமே சொந்த வீடு வைத்திருந்தவர்கள்.

அரசுப் பணியில் இருந்த அனைவரும் வாடகை வீடுதான்… இதை முதலில் மாற்றியது பள்ளி ஆசிரியர்கள்தான்…

ஊருக்கு வெளியே ப்ளாட் லேஅவுட் போட்டு, தவணை முறையில் பணம் கட்டினார்கள்… ஹவுசிங் லோன் போட்டு 2 வருடம் வரை வீடு கட்டினார்கள்…. ட்யூசன் எடுத்தார்கள்… மனைவியும் ஆசிரியர் பணியில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்….. ரியல் எஸ்டேட் என்னும் சொந்த வீட்டு ருசியை முதன் முதலில் அனுபவித்தவர்கள் சென்னைவாசி களே!

அவர்களுக்கு 70களின் நடுவில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், நங்கநல்லூர், மேட வாக்கம், ஆகிய இடங்களில் ப்ளாட்களாகவும், அசோக் நகர், மாம்பலம், கேகே நகர், அண்ணா நகர் என உருவாகி அடுக்கு மாடி கட்டிடங்களை தநாவீவவா தவணையில் விற்ற போது, அரசு ஊழியர் முதற்கொண்டு அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்…

கிரௌண்ட் விலை ₹ 20000 முதல் …. அடுக்குமாடி கட்டிடங்களின் தோராய விலை 70களில் சதுர அடி ₹100 லிருந்து.

80 களின் இறுதியில் அபார்ட்மெண்ட் சதுர அடி தி.நகர் அலாக்ரிடி ₹700, மாம்பலம் ₹ 450, கேகே நகர் ₹300…

நிறைய ரியல் எஸ்டேட்காரர்கள் காசு பார்த்தார்கள்… பல கட்டிட மேஸ்திரிகள் கட்டுமான அதிபர்களாக உருவானார்கள் சிவில் இஞ்சினியர்களின் உதவியோடு. பணப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த தெரிந்தவரெல்லாம் ரியல் எஸ்டேட் தொழிலில் விற்பன்னர் ஆனார்கள்….

1989 ல் மொத்தமாக ஒரே ஒரு வங்கிதான் தனியார் நிறவனங்களில் வேலை செய்வோர்க்கு வீட்டுக் கடன் தந்தது. அது கனரா வங்கியின் கேன்ஃபின் ஹோம்ஸ். 1990 ல் எச்டிஎஃப்சி இதற்கெனவே தொடங்கப்பட்டு பிற்காலத்தில் வங்கியாக மாறியது வேறு கதை. 1991 ல் எல்ஐசி வீ.வ.க. நிறுவனத்தைத் தொடங்கியதும்தான் மற்ற வங்கிகள் இதிலுள்ள லாபத்தை உணர்ந்தனர்… மிகவும் செக்யூர்ட் லோன் எனக் கருதி அனைவரும் களத்தில் குதித்தனர்.

1990ல் வீட்டுக் கடனுக்கு வட்டி எத்தனை தெரியுமா? HDFC 24% other banks 22% LICHFL 20%…

சிரிப்பு வருகிறது இப்போது. லோன் கொடுக்க அலைக்கழிப்பார்கள்…. எஸ்டிமேட், சிவில் சர்வேயர் அப்ரூவல், எம்எம்டிஏ அப்ருவல், கார்ப்பரேசன் அப்ரூவல் என காலை ஒடித்து ஒரு வருடத்திற்குப் பின் முதல் தவணையை கொடுப்பார்கள்… கடன் வாங்கி விட்டால் அதை திருப்பிக் கட்ட மாதாமாதம் மிரட்டல் நோட்டிஸ் வரும்… பல தனியார் வங்கிகள் ஆட்டோவை அனுப்பி வைப்பார்கள்….

எதற்கு சொல்ல வந்தேன் என்றால் ஒருவர் சம்பளத்தில் வாழ்வது கடினம்…. அடுத்த வீட்டில் பத்து ரூபாய் கைமாத்தோ, ஒரு டம்ளர் அத்யாவசியமாக சர்க்கரை கடனாகவோ வாங்காமல் 70களில் காலம் ஓட்ட முடியாது….

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சொந்த வீடு இருக்கிறது. வங்கி உங்கள் காலடியில் அதுவும் 8% வட்டிக்கு…. லோன் வாங்கிக்குங்க என்று போன் போட்டு கெஞ்சுகிறார்கள்…..

மாம்பலத்தில் நண்பர் சுந்தராமனிடமிருந்து 650 சதுர அடி அபார்ட்மெண்ட்டை 1991ல் வாங்கும். போது ரூ.2.25 லட்சம்…. சதுர அடி ₹320/- நங்கநல்லூரில் 1998இல் புதிய அடுக்குமாடி வீடு சதுர அடி ₹900/-.

இன்றைய தேதிகளில் புறநகர் எனும் சொல்லே மறந்து விட்டது. மேற்கே நசரேத் பேட்டை, தெற்கே செங்கல்பட்டு, வடக்கே செங்குன்றம் என சென்னை, தன்னைத் தானே மகாநகரமாக விரித்துக் கொண்டு விட்டது!

எல்லைகள் விரிந்து, வியாபாரம் பெருகி, 24 மணி நகரமாகி விட்ட சென்னையில், 1977ல் மாம்பலம் துரைசாமி ஐயர் சப்வேயில் இரவு 7:30 மணிக்கு நடந்து செல்ல பயப்பட்ட நிகழ்வுகள் உண்டு என்று சொன்னால் சி்ரிப்பீர்கள்!

டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!