நர்ஸ்.. சிஸ்டர்ஸ்-களுக்கு தமிழ்நாடு அரசில் பணி வாய்ப்பு!
தமிழகத்திலுள்ள மருத்துவத்துறை சார்ந்த அரசுப் பணியிடங்களை மெடிக்கல் சர்வீஸஸ் போர்டு என்ற அமைப்பு பொது தேர்வுகள் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காலியாக இருக்கும் 2,345 நர்சிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் என்ற இரு பாலரையும் உள்ளடக்கியவையாகும்.
வயது: இந்த இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளது. முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
தகுதி: பெண் விண்ணப்பதாரர்கள் ஜெனரல் நர்சிங் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பு டைய பயிற்சியை குறைந்த பட்சம் 6 மாத காலம் மேற்கொண்டவராக இருக்க வேண்டும். அதே போல் மிட்வைபரி பயிற்சியும் பெற்றவராக இருக்க வேண்டும். மெட்ராஸ் நர்சஸ் அண்டு மிட் வைபரி ஆக்ட் 1926 அடிப்படையில் பதிவு செய்து பயிற்சி மேற்கொண்டவராக இருக்க வேண்டும். யூ.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற நர்சிங் பட்டம் பெற்றவர்கள், வெளி நாட்டில் அங்கீகரிக்கப் பட்ட பயிற்சி மேற்கொண்டவர்கள், ராணுவப் பயிற்சி மேற்கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆண் விண்ணப்பதாரர்கள் இதே பயிற்சியை குறைந்த பட்சம் 3 வருட காலம் முடித்திருப்பது தேவைப் படும். நுட்பமான தகுதிகள் தேவையான பதவி என்பதால் சரியான மற்றும் முழுமையான தகவல் களை இணையதளத்தைப் பார்த்து அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.
ஊதியம் விபரம்: இந்த பணியிடங்கள் கன்சாலிடேட்டு பேமென்ட் அடிப்படையில் நிரப்பப்படுவதால் மாதம் ரூ.14 ஆயிரத்தை ஊதியமாகப் பெற முடியும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700/-ஐ இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.2.2019
ஆப்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 1.3.2019
தேர்வு நாள் : 23.6.2019
மேலும் விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு