தமிழகத்தில் 10 & பிளஸ் 2 வகுப்பைகளை திறக்க முடிவு?

தமிழகத்தில் 10 & பிளஸ் 2 வகுப்பைகளை திறக்க முடிவு?

இந்த மாதம் (ஜனவரி) 18ஆம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையொட்டி தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 12,000 பள்ளிகளில் நடைபெறும் இந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து, அரசு வெளியிட்ட விண்ணப்பங்களில் தங்களின் கருத்துகளை படிவங்களில் பூர்த்திசெய்து அளித்துள்ளனர். இன்றுடன் நிறைவு பெறும் இந்த கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது, 16 வகுப்பறைகளில் 24 பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்,

தலைமையாசிரியர்கள் அந்த கருத்துகளைத் தொகுத்து பள்ளிக் கல்வித்துறைக்கு இன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் முதலில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், ஜனவரி 18ஆம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கடந்த 9 மாதங்களாக தங்களின் குழந்தைகள் ஆன்லைன் மூலம் படிக்கிறார்கள், வேறு வழியில்லாமல் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்தாலும் நேரில் கற்கும் அனுபவத்தைப் பெறவில்லை. அதில் தான் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொண்ட திருப்தி இருக்கும் எனவே, பள்ளிகளைத் திறக்க வேண்டுமென பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் அரசு வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் அறிக்கையையும் வெளியிட வேண்டும் என்று பெற்றோர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் பள்ளிகளில் பெற்றோர்கள் அளித்த கருத்துக்களை தொகுத்து தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்றும் அந்த அறிக்கையின்பேரில் முதலமைச்சர் பழனிசாமி பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பார் என்றும் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனவே வரும் 18 ம்தேதி பள்ளிகளை திறப்பதற்கான முடிவை அரசு வெளியிடும் என்று கூறப்படுகிறது.

கிட்டதட்ட 9 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து ஒரிருநாட்களில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, முன்னதாக கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு வந்த பெற்றோர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனா வைரஸ் குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது, பள்ளி வகுப்பறைகள் முழுமையும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன.

Related Posts

error: Content is protected !!