May 17, 2021

காவிரி மேலாண்மைக்காக மெரினாவில் போராட்டம்! – அரசு அனுமதி அளிக்க முடிவு?

சர்வதேச அளவில் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான் சென்னை மெரினா, கடற்கரை 12 கி.மீ நீளமுடையது. தலைமைச் செயலகம், காவல்துறை தலைமை அலுவலகம் என தமிழகத்தின் பிரதான அரசு அலுவலகங்களும், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இதையொட்டியே அமைந்திருக்கின்றன. தொடக்கத்தில் களிமண் பரப்பாக இருந்த இந்தக் கடற்கரைப் பகுதியை 1880ம் ஆண்டு, ஆங்கிலேய அதிகாரி மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் அழகுபடுத்தினார். இப்போது சுதந்திரப் போராளிகள், படைப்பாளிகளின் சிலைகள், புகழ்பெற்ற உழைப்பாளர் சிலை என கலையும் அழகும் தவழும் இடமாக விளங்குகிறது மெரினா. சுதந்திரப் போராட்ட அனலை தேசம் முழுவதும் கொண்டு செல்ல மெரினாக் கடற்கரை மிகப் பெரிய பங்களித்திருக்கிறது. ஏராளமான தேசிய தலைவர்கள் இந்த கடற்கரை மணலில் நின்று விடுதலை வேட்கையை ஊட்டி யிருக்கிறார்கள். மகாத்மா காந்தி, நேதாஜி, அம்பேத்கர், திலகர், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் இங்கு நடந்த கூட்டங்களில் பேசியிருக்கிறார்கள். பாரதியார் பல வீரமிக்க உரைகளை இந்த கடற்கரை மணலில் நின்று ஆற்றியிருக்கிறார். பல்லாயிரம் மக்கள் கூட, உப்பு சத்தியாகிரக நிகழ்ச்சியும் இங்கு நிகழ்ந்திருக்கிறது. திலகர் பேசிய இடம் “திலகர் திடல்” என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. ஆக, அப்போதைய அரசியல் எழுச்சியின் அடையாளமாக இருந்த மெரினா விடுதலைக்குப் பின், குறிப்பாக அண்ணா மறைவுக்குப் பின் அது ஒரு கல்லறைக் கூடமாக மாறி விட்டது சோகம்தான்.அண்ணாவைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டாலும் அந்த அடையாளத்தையெல்லாம் மறக்கடிக்கும்படி அழித்து மெரினாவுக்கு மீண்டும் அரசியல் அடையாளத்தை வழங்கியது ஜல்லிக்கட்டு போராட்டம்தான். அவர்கள் கூடியதாகட்டும், இரவு முழுக்க ஆண்ட்ராய்ட் வெளிச்சத்தை எழுப்பியதாகட்டும் எல்லாவற்றிலும் புதியன புகுந்தது. ஆகவே பாரதியின் அடையாளமாக இருந்த மெரினா, எழுச்சியின் அடையாளமாக மறுபடியும் வரலாற்றில் இடம் பிடித்தது. ஆனால் அதன் பிறகு தமிழக அரசு மெரினாவில் பத்து பேர் கூடி கோஷம் போட்டாலே பட்டாலியனை வைத்து பந்தாட வைத்து காலி செய்வது வாடிக்கையாகி விட்டது. .

இந்நிலையில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. முன்னதாக இந்த வழக்கில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு போராட்டம் நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், இது குறித்து அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், போராட்டக்குழுவினரிடமிருந்து உத்தரவாதம் பெறுவதோடு, அவர்கள் அந்த பகுதியில் சட்ட மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கவோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ மாட்டார்கள் என்பதை அறிந்த பின்னர் அனுமதி அளிக்கப்படலாம் என தெரிகிறது. லும், அமைதியான முறையில் கடற்கரை ஓரத்தில் போராட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதற்கான அனுமதி தரும் பட்சத்தில் மீண்டும் மெரினாவில் மாபெரும் புரட்சி போராட்டம் நடைபெறலாம். இதற்கிடையே இந்தபோராட்டதிற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி தருவது குறித்து அரசு தீவிர பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மீண்டும் சரவ்தேச கவனத்தை ஈர்த்து காவிரி மேலாண்மை அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று அதன் மூலம் அதிமுக என்ற கட்சியின் இமேஜை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் எடப்பாடி & பன்னீர் டீம் ஆலோசித்து வருகிறார்களாம்