டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட் ஸ்வைப் மிஷின் வசதி?!

டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட்  ஸ்வைப் மிஷின் வசதி?!

தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 200 ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் உள்ளன. இந்த ‘டாஸ்மாக்’ கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக ரூ.55 கோடி முதல் ரூ.65 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும். சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது நாடெங்கும் நிலவும் சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு தேய்க்கும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

tasmac nov 24

கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் சில்லறை தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது. ஆரம்ப நாட்களில், டாஸ்மாக் கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஏற்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இது நிறுத்தப்பட்டுவிட்டது.

மேலும், கடைக்கு வருவோர் பலரும் ரூ.2000 நோட்டுகளை கொண்டு வருவதால், சில்லறைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, டாஸ்மாக் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். சில்லறை கிடைக்காத நிலையில், ‘குடிமகன்’களும் டாஸ்மாக் வருவதை தவிர்க்க தொடங்கியுள்ளனர்.இதன்காரணமாக, டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்துள்ளதால் விற்பனையும் சரிந்துள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் சராசரியாக, நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி வரை விற்பனை பாதித்துள்ளது.

இதையடுத்து, சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு தேய்க்கும் இயந்திரங்களை நிறுவ, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஸ்வைப் வசதி நடைமுறைக்கு வரும் எனவும் தெரிகிறது

error: Content is protected !!