கொரோனா ;சோதனை & தனிமைப்படுத்துதல் புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

கொரோனா ;சோதனை & தனிமைப்படுத்துதல் புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த பத்து நாட்களுக்கு பிறகு 500க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பொது ஊரடங்கு தளர்வில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர் களுக்கு கொரோனா நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு புதிய வழிகாட்டு நெறிமுறையை அறிவித்துள்ளது

இது குறித்து தலைமை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை விபரம் இதோ:

இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன இதில் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப வழிகாட்டுநெறிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டள்ளன,

தமிழ்நாட்டில் மாவட்டத்தை விட்டு மாவட்டம் வருபவர்கள் மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர் களுக்கு கொரோனா நோய்த்தொடர்பான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே டெஸ்ட் செய்யப் பட வேண்டும், அனைத்து தனிநபர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருந்தும் மற்ற மாநிலத்திலிருந்தும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும், அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்குமானால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்,

ஒரு வேளை நோய்த்தொற்று இல்லையொன்றால் அவர்கள் மகாராஷ்ட்ரா, டில்லி, குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு தொடர்ந்து 7 நாட்கள் தனிமைப் படுத்தும் வசதி செய்து தரப்படவேண்டும், அடுத்த 7 நாட்களில் தனிநபர்களுக்கு அறிகுறி இல்லையென்றால் அவர்களை வீட்டுக் கண்காணிப்புக்கு அல்லது அரசு கண்காணிப்புக்கு அனுப்பப்பட வேண்டும், ஒரு வேளை அவருக்கு அந்த வசதியில்லாவிட்டால் வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்புடுத்தப்பட வேண்டும்.

ஹாட் ஸ்பாட் மாநிலங்களில் இல்லாத நபர்களுக்கு நோய்த்தொற்று இல்லாவிட்டாலும் வீட்டு கண்காணிப்புக்கோ மருத்துவமனை கண்காணிப்புக்கோ அனுப்புதல் வேண்டும் அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அவர்கள் 14 நாட்கள் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும்,

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்திட வேண்டும், அவர்களுக்கு பரிசோதனை முடிவில் கொரோனா நோய்த்தொற்று இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பப் பட வேண்டும் நோய்த்தொற்று இல்லாவிட்டால் மருத்துவமனையிலோ அல்லது ஹோட்டல் களிலோ 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும், 7 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது பரிசோதனை செய்யப்பட வேண்டும், அப்போதும் ஒரு வேளை நோய்த்தொற்று இல்லா விட்டால் 14 நாட்கள் வீட்டுக்கண்காணிப்புக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்,

தனிமைப்படுத்தப்படும் தனிநபர்கள் மருத்துவ உதவியை நாடி மனுக்கள் வழங்கினால் அதை அரசு நான்கு தகுதியுள்ள பயணிகள் அடிப்படையில் வீட்டுக் கண்காணிப்புக்கோ மருத்துவ மனை கண்காணிப்புக்கோ முதற்கட்ட டெஸ்ட் அடிப்படை.யில் அனுப்பலாம் பரிசோதனை யில் நோய்த்தொற்று உள்ளதாக தெரிய வந்தால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட வேண்டும்

1, மிக மோசமான உடல் நிலையில் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் நபர்கள்,

2, ரத்த சம்பந்தப்பட்ட நபரின் இறப்புக்காக செல்ல வேண்டியவர்

3, கர்ப்பிணி பெண்கள் ,

4, 75 வயதுக்கு மேற்பட்ட முத்தவர்கள் மற்றும் தேவையான உதவியாளர்

இவ்வகை நான்கு வகை நபர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் மருத்துவ குழு பரிசோதனை செய்து நெருக்கடியை அறியலாம். இதில் எந்த ஒரு நபருக்கும் தளர்வு செய்யக்கூடாது. விதி விலக்கு வேண்டினால் முழுவிபரங்களுடன் முன்கூட்டியே தங்களது முறையீட்டை சம்பந்தப்பட்ட ஆணையத்திற்கு வழங்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

error: Content is protected !!